Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௪௭

وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْـًٔاۗ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَاۗ وَكَفٰى بِنَا حَاسِبِيْنَ   ( الأنبياء: ٤٧ )

And We set
وَنَضَعُ
நாம் வைப்போம்
the scales
ٱلْمَوَٰزِينَ
தராசுகளை
(of) the justice
ٱلْقِسْطَ
நீதமான
for (the) Day (of) the Resurrection
لِيَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
so not will be wronged
فَلَا تُظْلَمُ
அநீதி இழைக்கப்படாது
any soul
نَفْسٌ
ஓர் ஆன்மாவுக்கு
(in) anything
شَيْـًٔاۖ
அறவே
And if (there) be
وَإِن كَانَ
இருந்தாலும்
weight
مِثْقَالَ
அளவு
(of) a seed
حَبَّةٍ
விதை
of a mustard
مِّنْ خَرْدَلٍ
கடுகின்
We will bring [with] it
أَتَيْنَا بِهَاۗ
அதை நாம் கொண்டு வருவோம்
And sufficient (are) We
وَكَفَىٰ بِنَا
நாமே போதுமானவர்கள்
(as) Reckoners
حَٰسِبِينَ
விசாரிப்பவர்களாக

Wa nada'ul mawaazeenal qista li Yawmil Qiyaamati falaa tuzlamu nafsun shai'aa; wa in kaana misqaala habbatim min khardalin atainaa bihaa; wa kafaa binaa haasibeen (al-ʾAnbiyāʾ 21:47)

Abdul Hameed Baqavi:

மறுமை நாளில் சரியான தராசையே நாம் நாட்டுவோம். யாதொரு ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் (நிறுக்க) அதனையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.)

English Sahih:

And We place the scales of justice for the Day of Resurrection, so no soul will be treated unjustly at all. And if there is [even] the weight of a mustard seed, We will bring it forth. And sufficient are We as accountant. ([21] Al-Anbya : 47)

1 Jan Trust Foundation

இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.