நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்" என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (யன்றி வேறில்லை.) அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையில் அதில் தங்கிவிடுவார்கள்.
English Sahih:
That I might do righteousness in that which I left behind." No! It is only a word he is saying; and behind them is a barrier until the Day they are resurrected. ([23] Al-Mu'minun : 100)
1 Jan Trust Foundation
“நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இன்றைய தினத்திற்கு முன் அமல்களில்) நான் விட்டுவிட்டவற்றிலிருந்து (சில) நல்ல அமல்களை(யாவது) நான் செய்வதற்காக (என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்பு). ஒரு போதும் அவ்வாறு அல்ல. (உலகத்திற்கு அவன் அனுப்பப்படவே மாட்டான். என்னை உலகிற்கு அனுப்புங்கள் என்ற) இது ஒரு வீண் பேச்சாகும். அவன் அதைக் கூறிக்கொண்டே இருப்பான். அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள்வரை அவர்களுக்கு முன் ஒரு தடை இருக்கிறது. (அவர்கள் உலகிற்கு திரும்புவதிலிருந்து அது அவர்களை தடுத்துவிடும்.)
القرآن الكريم - المؤمنون٢٣ :١٠٠ Al-Mu'minun 23:100