(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு இறைவனை (வணக்கத்திற்குரியவன் என) அழைக்கின்றானோ அவனிடத்தில் அதற்குரிய யாதொரு அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாவக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையை) நிராகரிக்கும் இத்தகையவர் வெற்றி பெறமாட்டார்கள்.
English Sahih:
And whoever invokes besides Allah another deity for which he has no proof – then his account is only with his Lord. Indeed, the disbelievers will not succeed. ([23] Al-Mu'minun : 117)
1 Jan Trust Foundation
மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை; அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது; நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வுடன் யார் வேறு ஒரு கடவுளை அழைப்பாரோ - அதற்கு அவரிடம் அறவே ஆதாரம் இல்லாமல் இருக்க - அவருடைய விசாரணையெல்லாம் அவரது இறைவனிடம்தான். நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.
القرآن الكريم - المؤمنون٢٣ :١١٧ Al-Mu'minun 23:117