அவன் எத்தகையவனென்றால் வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அவன் "அர்ஷின்" மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவன்தான் ரஹ்மான். (ரஹ்மான் எனப்படுபவனும் அல்லாஹ் எனப்படுபவனும் ஒருவனே.) இதைப் பற்றித் தெரிந்தவர்களைக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
English Sahih:
He who created the heavens and the earth and what is between them in six days and then established Himself above the Throne – the Most Merciful, so ask about Him one well informed [i.e., the Prophet]. ([25] Al-Furqan : 59)
1 Jan Trust Foundation
அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான்; (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவன் பேரருளாளன். அவனை (-ரஹ்மானை) அறிந்தவனிடம் கேட்பீராக! (நான்தான் அறிந்தவன். நான் அவனை (-ரஹ்மானை)ப் பற்றி அறிவித்தால் அது நான் அறிவித்தது போன்றே.)