Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨௭

تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَنْ تَشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ  ( آل عمران: ٢٧ )

You cause to enter
تُولِجُ
நுழைக்கிறாய்
the night
ٱلَّيْلَ
இரவை
in the day
فِى ٱلنَّهَارِ
பகலில்
and You cause to enter
وَتُولِجُ
இன்னும் நுழைக்கிறாய்
the day
ٱلنَّهَارَ
பகலை
in the night
فِى ٱلَّيْلِۖ
இரவில்
and You bring forth
وَتُخْرِجُ
இன்னும் வெளியாக்குகிறாய்
the living
ٱلْحَىَّ
உயிருள்ளதை
from the dead
مِنَ ٱلْمَيِّتِ
இறந்ததிலிருந்து
and You bring forth
وَتُخْرِجُ
இன்னும் வெளியாக்குகிறாய்
the dead
ٱلْمَيِّتَ
இறந்ததை
from the living
مِنَ ٱلْحَىِّۖ
உயிருள்ளதிலிருந்து
and You give provision
وَتَرْزُقُ
இன்னும் வழங்குகிறாய்
(to) whom You will
مَن تَشَآءُ
நீ நாடியவருக்கு
without measure"
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றி

Toolijul laila fin nahaari wa toolijun nahaara fil laili wa tukhrijul haiya minalmaiyiti wa tukhrijulo maiyita minal haiyi wa tarzuqu man tashaaa'u bighari hisab (ʾĀl ʿImrān 3:27)

Abdul Hameed Baqavi:

நீதான் இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். நீதான் பகலை இரவில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கின்றாய்."

English Sahih:

You cause the night to enter the day, and You cause the day to enter the night; and You bring the living out of the dead, and You bring the dead out of the living. And You give provision to whom You will without account [i.e., limit or measure]." ([3] Ali 'Imran : 27)

1 Jan Trust Foundation

(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.