Skip to main content

ஸூரத்துர் ரூம் வசனம் ௩௯

وَمَآ اٰتَيْتُمْ مِّنْ رِّبًا لِّيَرْبُوَا۠ فِيْٓ اَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُوْا عِنْدَ اللّٰهِ ۚوَمَآ اٰتَيْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ  ( الروم: ٣٩ )

And what you give
وَمَآ ءَاتَيْتُم
எதை/நீங்கள்கொடுத்தீர்கள்
for usury
مِّن رِّبًا
அன்பளிப்புகளிலிருந்து
to increase
لِّيَرْبُوَا۟
வளர்ச்சி காணுவதற்காக
in (the) wealth
فِىٓ أَمْوَٰلِ
செல்வங்களில்
(of) people
ٱلنَّاسِ
மக்களின்
not (will) increase
فَلَا يَرْبُوا۟
அது வளர்ச்சி காணாது
with Allah
عِندَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடம்
But what you give
وَمَآ ءَاتَيْتُم
எதை/நீங்கள்கொடுத்தீர்கள்
of zakah
مِّن زَكَوٰةٍ
தர்மங்களிலிருந்து
desiring
تُرِيدُونَ
நீங்கள் நாடியவர்களாக
(the) Countenance
وَجْهَ
முகத்தை
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
then those [they]
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
(will) get manifold
ٱلْمُضْعِفُونَ
பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்

Wa maaa aataitum mir ribal li yarbuwa feee amwaalin naasi falaa yarboo 'indal laahi wa maaa aataitum min zaakaatin tureedoona wajhal laahi fa ulaaa'ika humul mud'ifoon (ar-Rūm 30:39)

Abdul Hameed Baqavi:

(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்.

English Sahih:

And whatever you give for interest [i.e., advantage] to increase within the wealth of people will not increase with Allah. But what you give in Zakah, desiring the face [i.e., approval] of Allah – those are the multipliers. ([30] Ar-Rum : 39)

1 Jan Trust Foundation

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.