Skip to main content

ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௫௫

لَا جُنَاحَ عَلَيْهِنَّ فِيْٓ اٰبَاۤىِٕهِنَّ وَلَآ اَبْنَاۤىِٕهِنَّ وَلَآ اِخْوَانِهِنَّ وَلَآ اَبْنَاۤءِ اِخْوَانِهِنَّ وَلَآ اَبْنَاۤءِ اَخَوٰتِهِنَّ وَلَا نِسَاۤىِٕهِنَّ وَلَا مَا مَلَكَتْ اَيْمَانُهُنَّۚ وَاتَّقِيْنَ اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدًا   ( الأحزاب: ٥٥ )

(There is) no blame
لَّا جُنَاحَ
குற்றம் இல்லை
upon them
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
concerning their fathers
فِىٓ ءَابَآئِهِنَّ
தங்கள் தந்தைமார்கள் விஷயத்தில்
and not their sons
وَلَآ أَبْنَآئِهِنَّ
இன்னும் தங்கள் ஆண் பிள்ளைகள்
and not their brothers
وَلَآ إِخْوَٰنِهِنَّ
இன்னும் தங்கள் சகோதரர்கள்
and not sons
وَلَآ أَبْنَآءِ
இன்னும் ஆண் பிள்ளைகள்
(of) their brothers
إِخْوَٰنِهِنَّ
தங்கள் சகோதரர்களின்
and not sons
وَلَآ أَبْنَآءِ
இன்னும் ஆண் பிள்ளைகள்
(of) their sisters
أَخَوَٰتِهِنَّ
தங்கள் சகோதரிகளின்
and not their women
وَلَا نِسَآئِهِنَّ
இன்னும் தங்கள் பெண்கள்
and not what they rightfully possess
وَلَا مَا مَلَكَتْ
இன்னும் சொந்தமாக்கியவர்கள்
they rightfully possess
أَيْمَٰنُهُنَّۗ
தங்கள் வலக்கரங்கள்
And fear
وَٱتَّقِينَ
பயந்து கொள்ளுங்கள்!
Allah
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
is
كَانَ
இருக்கின்றான்
over all things
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
a Witness
شَهِيدًا
நன்கு பார்த்தவனாக

Laa junaaha 'alaihinna feee aabaaa'ihinna wa laaa abnaaa'ihinna wa laaa ikhwaanihinnna wa laaa abnaaa'i ikhwaanihinna wa laaa abnaaa'i akhawaatihinna wa laa nisaaa'i hinna wa laa Maa malakat aimaanuhunn; wattaqeenal laah; innal laaha kaana 'alaa kulli shai'in Shaheedaa (al-ʾAḥzāb 33:55)

Abdul Hameed Baqavi:

நபியுடைய மனைவிகள் தங்களுடைய தந்தைகள் முன்பாகவும், தங்கள் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்களின் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் சகோதரிகளின் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் (போன்ற நம்பிக்கையாளர்களான) பெண்கள் முன்பாகவும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் முன்பாகவும் (வருவதில்) அவர்கள் மீது யாதொரு குற்றமுமில்லை. (இவர்களைத் தவிர மற்றவர்கள் முன் வருவதைப் பற்றி நபியுடைய மனைவிகளே!) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் பார்த்தவனாகவே இருக்கிறான்.

English Sahih:

There is no blame upon them [i.e., women] concerning their fathers or their sons or their brothers or their brothers' sons or their sisters' sons or their women or those their right hands possess [i.e., slaves]. And fear Allah. Indeed Allah is ever, over all things, Witness. ([33] Al-Ahzab : 55)

1 Jan Trust Foundation

(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.