Wa iz akhaznaa minan Nabiyyeena meesaaqahum wa minka wa min Noohinw wa Ibraaheema wa Moosaa wa Eesab-ni-Maryama wa akhaznaa minhum meesaaqan ghaleezaa (al-ʾAḥzāb 33:7)
(நபியே! நம்முடைய தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உங்களிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கிய சமயத்தில், மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம் (என்பதை இவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்).
English Sahih:
And [mention, O Muhammad], when We took from the prophets their covenant and from you and from Noah and Abraham and Moses and Jesus, the son of Mary; and We took from them a solemn covenant ([33] Al-Ahzab : 7)
1 Jan Trust Foundation
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எல்லா நபிமார்களிடமும் உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸாவிடமும் நாம் அவர்களின் ஒப்பந்தத்தை வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராக. அவர்களிடம் உறுதியான ஒப்பந்தத்தை நாம் வாங்கினோம்.