Skip to main content

ஸூரத்துஸ் ஸபா வசனம் ௧௨

وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ غُدُوُّهَا شَهْرٌ وَّرَوَاحُهَا شَهْرٌۚ وَاَسَلْنَا لَهٗ عَيْنَ الْقِطْرِۗ وَمِنَ الْجِنِّ مَنْ يَّعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِاِذْنِ رَبِّهٖۗ وَمَنْ يَّزِغْ مِنْهُمْ عَنْ اَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيْرِ   ( سبإ: ١٢ )

And to Sulaiman
وَلِسُلَيْمَٰنَ
இன்னும் சுலைமானுக்கு
the wind
ٱلرِّيحَ
காற்றை(யும்)
its morning course
غُدُوُّهَا
அதன் காலைப்பொழுது(ம்)
(was) a month
شَهْرٌ
ஒரு மாதமாகும்
and its afternoon course
وَرَوَاحُهَا
இன்னும் அதன் மாலைப்பொழுதும்
(was) a month
شَهْرٌۖ
ஒரு மாதமாகும்
and We caused to flow
وَأَسَلْنَا
இன்னும் ஓட வைத்தோம்
for him
لَهُۥ
அவருக்கு
a spring
عَيْنَ
சுரங்கத்தை
(of) molten copper
ٱلْقِطْرِۖ
செம்பினுடைய
And [of] the jinn
وَمِنَ ٱلْجِنِّ
இன்னும் ஜின்களிலிருந்து
who worked
مَن يَعْمَلُ
வேலை செய்கின்றவர்களை
before him before him
بَيْنَ يَدَيْهِ
அவருக்கு முன்னால்
by the permission
بِإِذْنِ
உத்தரவின் படி
(of) his Lord
رَبِّهِۦۖ
அவரது இறைவனின்
And whoever
وَمَن
யார்
deviated
يَزِغْ
விலகுவாரோ
among them
مِنْهُمْ
அவர்களில்
from Our Command
عَنْ أَمْرِنَا
நமது கட்டளையை விட்டு
We will make him taste
نُذِقْهُ
அவருக்கு நாம் சுவைக்க வைப்போம்
of (the) punishment
مِنْ عَذَابِ
தண்டனையை
(of) the Blaze
ٱلسَّعِيرِ
கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்

Wa li-Sulaimaanar reeha ghuduwwuhaa shahrunw wa ra-waahuhaa shahrunw wa asalnaa lahoo 'ainal qitr; wa minal jinni mai ya'malu baina yadaihi bi izni Rabbih; wa mai yazigh minhum 'an amrinaa nuziqhu min 'azaabis sa'eer (Sabaʾ 34:12)

Abdul Hameed Baqavi:

அன்றி, ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம். அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமுமாக இருந்தது. அன்றி, செம்பை ஊற்று (நீரை)ப் போல் நாம் அவருக்கு (உருகி) ஓடச்செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்து (அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில்) எவன் நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்றோம்).

English Sahih:

And to Solomon [We subjected] the wind – its morning [journey was that of] a month – and its afternoon [journey was that of] a month, and We made flow for him a spring of [liquid] copper. And among the jinn were those who worked for him by the permission of his Lord. And whoever deviated among them from Our command – We will make him taste of the punishment of the Blaze. ([34] Saba : 12)

1 Jan Trust Foundation

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).