Skip to main content
bismillah

ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே!
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
لَهُۥ
அவனுக்கே உரியன
مَا فِى
வானங்களில் உள்ளவை(யும்)
وَمَا فِى
பூமியில் உள்ளவையும்
وَلَهُ
அவனுக்கே
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
فِى ٱلْءَاخِرَةِۚ
மறுமையிலும்
وَهُوَ
அவன்தான்
ٱلْحَكِيمُ
மகாஞானமுடையவன்
ٱلْخَبِيرُ
ஆழ்ந்தறிபவன்

Alhamdu lillaahil lazee lahoo maa fis samaawaati wa maa fil ardi wa lahul hamdu fil aakhirah; wa Huwal Hakeemul Khabeer

புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவைகளே! மறுமையிலும் எல்லா புகழும் அவனுக்குரியதே! அவன் ஞானமுடையவனும் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَعْلَمُ
அவன் நன்கறிவான்
مَا يَلِجُ
நுழைவதை(யும்)
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَمَا يَخْرُجُ
வெளியேறுவதையும்
مِنْهَا
அதிலிருந்து
وَمَا يَنزِلُ
இறங்குவதையும்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
وَمَا يَعْرُجُ
ஏறுவதையும்
فِيهَاۚ
அதில்
وَهُوَ
அவன்தான்
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்

Ya'lamu maa yaliju fil ardi wa maa yakhruju minhaa wa maa yanzilu minas samaaa'i wa maa ya'ruju feehaa; wa Huwar Raheemul Ghafoor

பூமிக்குள் பதிகின்ற (வித்து போன்ற)வைகளையும், அதில் இருந்து வெளிப்படும் (மரம் செடி ஆகிய) இவைகளையும் வானத்தில் இருந்து இறங்குபவைகளையும், அதன் பக்கம் ஏறுகின்றவை களையும் அவன் நன்கறிவான். அவன் மகா கிருபையுடையவனும் மிக்க மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

Tafseer

وَقَالَ
கூறுகின்றனர்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
لَا تَأْتِينَا
எங்களிடம் வராது
ٱلسَّاعَةُۖ
மறுமை
قُلْ
கூறுவீராக!
بَلَىٰ
ஏன் (வராது)
وَرَبِّى
என் இறைவன் மீது சத்தியமாக
لَتَأْتِيَنَّكُمْ
நிச்சயமாக அது உங்களிடம் வரும்
عَٰلِمِ
நன்கறிந்தவனாகிய
ٱلْغَيْبِۖ
மறைவானவற்றை
لَا يَعْزُبُ
எதுவும் மறைந்துவிடாது
عَنْهُ
அவனை விட்டும்
مِثْقَالُ
அளவும்
ذَرَّةٍ
அணு
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
وَلَا فِى
பூமியிலும்
وَلَآ أَصْغَرُ
சிறியது இல்லை
مِن ذَٰلِكَ
அதை விட
وَلَآ أَكْبَرُ
பெரியது இல்லை
إِلَّا
தவிர
فِى كِتَٰبٍ
பதிவேட்டில் இருந்தே
مُّبِينٍ
தெளிவான

Wa qaalal lazeena kafaroo laa taateenas Saa'ah; qul balaa wa Rabbee lataatiyannakum 'Aalimul Ghaib; laa ya'zubu 'anhu misqaalu zarratin fis samaawaati wa laa fil ardi wa laaa asgharu min zaalika wa laaa akbaru illaa fee kitaabim mubeen

(எனினும்) "மறுமை நமக்கு வராது" என்று இந்நிராகரிப் பவர்கள் கூறுகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அது வரும். என் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அது உங்களிடம் வந்தே தீரும். என் இறைவன் மறைவானவை அனைத்தையும் அறிந்தவன். அவன் அறியாது வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவைவிட சிறியதோ அல்லது பெரியதோ (ஒவ்வொன்றும் "லவ்ஹுல் மஹ்ஃபூள்" என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை."

Tafseer

لِّيَجْزِىَ
அவன் கூலிகொடுப்பதற்காக
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِۚ
நன்மைகளை
أُو۟لَٰٓئِكَ لَهُم
அவர்களுக்கு
مَّغْفِرَةٌ
மன்னிப்பு(ம்)
وَرِزْقٌ
வாழ்க்கையும்
كَرِيمٌ
கண்ணியமான

Liyajziyal lazeena aamanoo wa 'amilus saalihaat; ulaaa'ika lahum maghfiratunw wa rizqun kareem

நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தவர்களுக்குக் கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு அதில் பதியப்பட்டுள்ளது). இத்தகையவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் (வாழ்க்கையும்) உண்டு.

Tafseer

وَٱلَّذِينَ سَعَوْ
முயற்சிப்பவர்கள்
فِىٓ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
مُعَٰجِزِينَ
அவர்கள் முறியடிப்பதற்காக
أُو۟لَٰٓئِكَ لَهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை உண்டு
مِّن رِّجْزٍ
கெட்ட தண்டனையின்
أَلِيمٌ
மிகவும் வலிமிக்க

Wallazeena sa'aw feee aayaatinaa mu'aajizeena ulaaa 'ika lahum 'azaabum mir irjzin aleem

எவர்கள் நம்முடைய வசனங்களுக்கு எதிரிடையாக (நம்மை)த் தோற்கடிக்க முயற்சி செய்கின்றார்களோ அத்தகையவர் களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு.

Tafseer

وَيَرَى
அறிவார்கள்
ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
ٱلْعِلْمَ
கல்வி
ٱلَّذِىٓ أُنزِلَ
இறக்கப்பட்டதை
إِلَيْكَ
உமக்கு
مِن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
هُوَ
அதுதான்
ٱلْحَقَّ
சத்தியம்
وَيَهْدِىٓ
இன்னும் நேர்வழி காட்டுகிறது
إِلَىٰ صِرَٰطِ
பாதைக்கு
ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின்

Wa yaral lazeena utul 'Ilmal lazeee unzila ilaika mir Rabbika huwal haqqa wa yahdeee ilaaa siraatil 'Azeezil Hameed

(நபியே!) எவர்களுக்கு வேதம் கொடுக்கப்பட்டதோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்)கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தை உங்கள் இறைவனால் அருளப்பட்ட உண்மையான வேதமென்றும், அனைவரையும் மிகைத்த மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியை அறிவிக்கக் கூடியது என்றே எண்ணுவார்கள்.

Tafseer

وَقَالَ
கூறுகின்றனர்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
هَلْ نَدُلُّكُمْ
நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா?
عَلَىٰ رَجُلٍ
ஓர் ஆடவரை
يُنَبِّئُكُمْ
அவர் உங்களுக்கு அறிவிக்கின்றார்
إِذَا مُزِّقْتُمْ
நீங்கள் கிழிக்கப்பட்ட பின்னர்
كُلَّ مُمَزَّقٍ
சுக்கு நூறாக
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
لَفِى خَلْقٍ
படைப்பாக (உருவாக்கப்படுவீர்கள்)
جَدِيدٍ
புதிய

Wa qaalal lazeena kafaroo hal nadullukum 'alaa rajuliny yanabbi 'ukum izaa muzziqtum kulla mumazzaqin innakum lafee khalqin jadeed

எனினும், எவர்கள் நிராகரிக்கின்றவர்களாக இருக்கின் றார்களோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் (இறந்து மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடியதொரு மனிதனை நாம் உங்களுக்கு அறிவிக்கவா" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.

Tafseer

أَفْتَرَىٰ
அவர் இட்டுக்கட்டுகிறாரா
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
كَذِبًا
பொய்யை
أَم
அல்லது
بِهِۦ
அவருக்கு
جِنَّةٌۢۗ
பைத்தியம் (பிடித்திருக்கிறதா?)
بَلِ
மாறாக
ٱلَّذِينَ لَا
நம்பிக்கை கொள்ளாதவர்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
فِى ٱلْعَذَابِ
வேதனையிலும்
وَٱلضَّلَٰلِ
வழிகேட்டிலும்
ٱلْبَعِيدِ
தூரமான

Aftaraa 'alal laahi kaziban am bihee jinnah; balil lazeena laa yu'minoona bil Aakhirati fil'azaabi waddad laalil ba'eed

அன்றி, (இம்மனிதர்) "அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கொண்டாரோ அல்லது அவருக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறதோ" என்று (அவரிடம் கூறுகின்றனர்.) அவ்வாறன்று. எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள் தாம் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்.

Tafseer

أَفَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
إِلَىٰ مَا
தங்களுக்கு முன்னுள்ள
وَمَا خَلْفَهُم
இன்னும் தங்களுக்கு பின்னுள்ள
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்தையும்
وَٱلْأَرْضِۚ
பூமியையும்
إِن نَّشَأْ
நாம் நாடினால்
نَخْسِفْ
சொருகிவிடுவோம்
بِهِمُ
அவர்களை
ٱلْأَرْضَ
பூமியில்
أَوْ
அல்லது
نُسْقِطْ
விழவைப்போம்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
كِسَفًا
துண்டுகளை
مِّنَ ٱلسَّمَآءِۚ
வானத்தின்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கின்றது
لَءَايَةً
ஒர் அத்தாட்சி
لِّكُلِّ عَبْدٍ
எல்லா அடியார்களுக்கும்
مُّنِيبٍ
திரும்பக்கூடிய

Afalam yaraw ilaa maa baina aydeehim wa maa khalfahum minas samaaa'i wal ard; in nashad nakhsif bihimul arda aw nusqit 'alaihim kisafam minas samaaa'; inna fee zaalika la Aayatal likulli 'abdim muneeb

வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவைகளை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
வழங்கினோம்
دَاوُۥدَ
தாவூதுக்கு
مِنَّا
நம் புறத்தில் இருந்து
فَضْلًاۖ
மேன்மையை
يَٰجِبَالُ
மலைகளே!
أَوِّبِى
நீங்கள் துதியுங்கள்
مَعَهُۥ
அவருடன்
وَٱلطَّيْرَۖ
பறவைகளே!
وَأَلَنَّا
இன்னும் மென்மையாக்கினோம்
لَهُ
அவருக்கு
ٱلْحَدِيدَ
இரும்பை

Wa laqad aatainaa Daawooda minnaa fadlany yaa jibaalu awwibee ma'ahoo wattaira wa alannaa lahul hadeed

மெய்யாகவே நாம் தாவூதுக்குப் பெரும் அருள்புரிந்து மலைகளை நோக்கி "நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி செய்யுங்கள்" என்று கட்டளையிட்டோம். அவ்வாறே பறவைகளுக்கும் (கட்டளையிட்டோம். அன்றி,) அவருக்கு இரும்பை (மெழுகைப் போல்) மெதுவாக்கித் தந்தோம்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துஸ் ஸபா
القرآن الكريم:سبإ
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Saba'
ஸூரா:34
வசனம்:54
Total Words:833
Total Characters:1512
Number of Rukūʿs:6
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:58
Starting from verse:3606