Skip to main content

أَنِ ٱعْمَلْ
செய்வீராக!
سَٰبِغَٰتٍ
உருக்குச் சட்டைகள்
وَقَدِّرْ
இன்னும் அளவாக செய்வீராக!
فِى ٱلسَّرْدِۖ
ஆணிகளை
وَٱعْمَلُوا۟
இன்னும் செய்யுங்கள்
صَٰلِحًاۖ
நன்மையை
إِنِّى
நிச்சயமாக நான்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
بَصِيرٌ
உற்று நோக்குகின்றேன்

Ani'mal saabighaatinw wa qaddir fis sardi wa'maloo saalihan innee bimaa ta'maloona Baseer

மேலும், (சங்கிலி) வளையங்களை (முறைப்படி) ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யும்படியும் (கட்டளையிட்டதுடன் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நோக்கி) "நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நான், நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கினவனாக இருக்கிறேன்" (என்றோம்).

Tafseer

وَلِسُلَيْمَٰنَ
இன்னும் சுலைமானுக்கு
ٱلرِّيحَ
காற்றை(யும்)
غُدُوُّهَا
அதன் காலைப்பொழுது(ம்)
شَهْرٌ
ஒரு மாதமாகும்
وَرَوَاحُهَا
இன்னும் அதன் மாலைப்பொழுதும்
شَهْرٌۖ
ஒரு மாதமாகும்
وَأَسَلْنَا
இன்னும் ஓட வைத்தோம்
لَهُۥ
அவருக்கு
عَيْنَ
சுரங்கத்தை
ٱلْقِطْرِۖ
செம்பினுடைய
وَمِنَ ٱلْجِنِّ
இன்னும் ஜின்களிலிருந்து
مَن يَعْمَلُ
வேலை செய்கின்றவர்களை
بَيْنَ يَدَيْهِ
அவருக்கு முன்னால்
بِإِذْنِ
உத்தரவின் படி
رَبِّهِۦۖ
அவரது இறைவனின்
وَمَن
யார்
يَزِغْ
விலகுவாரோ
مِنْهُمْ
அவர்களில்
عَنْ أَمْرِنَا
நமது கட்டளையை விட்டு
نُذِقْهُ
அவருக்கு நாம் சுவைக்க வைப்போம்
مِنْ عَذَابِ
தண்டனையை
ٱلسَّعِيرِ
கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்

Wa li-Sulaimaanar reeha ghuduwwuhaa shahrunw wa ra-waahuhaa shahrunw wa asalnaa lahoo 'ainal qitr; wa minal jinni mai ya'malu baina yadaihi bi izni Rabbih; wa mai yazigh minhum 'an amrinaa nuziqhu min 'azaabis sa'eer

அன்றி, ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம். அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமுமாக இருந்தது. அன்றி, செம்பை ஊற்று (நீரை)ப் போல் நாம் அவருக்கு (உருகி) ஓடச்செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்து (அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில்) எவன் நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்றோம்).

Tafseer

يَعْمَلُونَ
அவை செய்கின்றன
لَهُۥ
அவருக்கு
مَا يَشَآءُ
அவர் நாடுகின்ற(தை)
مِن مَّحَٰرِيبَ
தொழுமிடங்களை(யும்)
وَتَمَٰثِيلَ
சிலைகளையும்
وَجِفَانٍ
பாத்திரங்களையும்
كَٱلْجَوَابِ
நீர் தொட்டிகளைப் போன்ற
وَقُدُورٍ
சட்டிகளையும்
رَّاسِيَٰتٍۚ
உறுதியான
ٱعْمَلُوٓا۟
செய்யுங்கள்
ءَالَ
குடும்பத்தார்களே!
دَاوُۥدَ
தாவூதின்
شُكْرًاۚ
நன்றி செலுத்துவதற்காக
وَقَلِيلٌ
குறைவானவர்களே
مِّنْ عِبَادِىَ
என் அடியார்களில்
ٱلشَّكُورُ
நன்றி செலுத்துபவர்கள்

Ya'maloona lahoo ma yashaaa'u mim mahaareeba wa tamaaseela wa jifaanin kaljawaabi wa qudoorir raasiyaat; i'maloo aala Daawooda shukraa; wa qaleelum min 'ibaadiyash shakoor

அ(ன்றி, ஜின் ஆகிய)வைகள் ஸுலைமான் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், (பெரிய பெரிய) தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத பெரிய (பெரிய) "தேகு" (சமையல் பாத்திரங்)களையும் செய்து கொண்டிருந்தன. (அவருடைய குடும்பத்தினரை நோக்கி) "தாவூதுடைய சந்ததிகளே! இவைகளுக்காக நீங்கள் (நமக்கு) நன்றி செலுத்திக் கொண்டிருங்கள்" (என்று கட்டளையிட்டோம்). எனினும் என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சொற்பமாகவே இருக்கின்றார்கள்.

Tafseer

فَلَمَّا قَضَيْنَا
நாம் முடிவு செய்தபோது
عَلَيْهِ
அவருக்கு
ٱلْمَوْتَ
மரணத்தை
مَا دَلَّهُمْ
அவர்களுக்கு அறிவிக்கவில்லை
عَلَىٰ مَوْتِهِۦٓ
அவர் மரணித்து விட்டதை
إِلَّا
தவிர
دَآبَّةُ ٱلْأَرْضِ
கரையானை
تَأْكُلُ
தின்ற(து)
مِنسَأَتَهُۥۖ
அவருடைய தடியை
فَلَمَّا خَرَّ
அவர் கீழே விழுந்தபோது
تَبَيَّنَتِ
தெளிவாக தெரிய வந்தது
ٱلْجِنُّ
ஜின்களுக்கு
أَن لَّوْ
தாங்கள் அறிந்துகொண்டிருந்தால்
ٱلْغَيْبَ
மறைவானவற்றை
مَا لَبِثُوا۟
தங்கி இருந்திருக்க மாட்டார்கள்
فِى ٱلْعَذَابِ
வேதனையில்
ٱلْمُهِينِ
இழிவான

Falammaa qadainaa 'alaihil mawta ma dallahum 'alaa mawtiheee illaa daaabbatul ardi taakulu minsa atahoo falammaa kharra tabaiyanatil jinnu al law kaanoo ya'lamoonal ghaiba maa labisoo fil 'azaabil muheen

ஸுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்தபொழுது அவர் இறந்துவிட்டார் என்பதை, அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர (மற்ற எவரும்) அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. (அவர் சாய்ந்திருந்த தடியைக் கரையான் பூச்சிகள் அரித்துவிட்டன. ஆகவே, அதன் மீது சாய்ந்திருந்த ஸுலைமான் கீழே விழுந்துவிட்டார்.) அவர் கீழே விழவே (வேலை செய்து கொண்டிருந்த) அந்த ஜின்களுக்கு தாங்கள் மறைவான விஷயங்களை அறியக்கூடுமாக இருந்தால் (இரவு பகலாக உழைக்க வேண்டிய) இழிவு தரும் இவ்வேதனையில் தரித்திருக்கமாட்டோம் என்று தெளிவாகத் தெரிந்தது.

Tafseer

لَقَدْ
திட்டவட்டமாக
كَانَ
இருக்கின்றது
لِسَبَإٍ
சபா நகர மக்களுக்கு
فِى مَسْكَنِهِمْ
அவர்களின் தங்குமிடத்தில்
ءَايَةٌۖ
ஓர் அத்தாட்சி
جَنَّتَانِ
இரண்டு தோட்டங்கள்
عَن يَمِينٍ
வலது பக்கத்திலும்
وَشِمَالٍۖ
இடது பக்கத்திலும்
كُلُوا۟
உண்ணுங்கள்!
مِن رِّزْقِ
உணவை
رَبِّكُمْ
உங்கள் இறைவனின்
وَٱشْكُرُوا۟
இன்னும் நன்றி செலுத்துங்கள்
لَهُۥۚ
அவனுக்கு
بَلْدَةٌ طَيِّبَةٌ
நல்ல ஊர்
وَرَبٌّ
இன்னும் இறைவன்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்

Laqad kaana li Saba-in fee maskanihim Aayatun jannataani 'ai yameeninw wa shimaalin kuloo mir rizq Rabbikum washkuroolah; baldatun taiyibatunw wa Rabbun Ghafoor

மெய்யாகவே "ஸபா"வாசிகள் வசித்திருந்த இடத்தில் அவர்களுக்கு நல்லதோர் அத்தாட்சியிருந்தது. (அதன் வழியாகச் செல்பவர்களுக்கு) வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரு சோலைகள் இருந்தன. "உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்தவைகளைப் புசித்துக்கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (இம்மையில்) வளமான நகரமும், (மறுமையில்) மிக்க மன்னிப்புடைய இறைவனும் (உங்களுக்கு) உண்டு" (எனவும் கூறப்பட்டது).

Tafseer

فَأَعْرَضُوا۟
ஆனால் புறக்கணித்தனர்
فَأَرْسَلْنَا
ஆகவே அனுப்பினோம்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
سَيْلَ
பெரும் வெள்ளத்தை
ٱلْعَرِمِ
அடியோடு அரித்து செல்கின்ற
وَبَدَّلْنَٰهُم
இன்னும் மாற்றிவிட்டோம் அவர்களுக்கு
بِجَنَّتَيْهِمْ
அவர்களின் இரண்டு தோட்டங்களுக்குப் பதிலாக
جَنَّتَيْنِ
இரண்டு தோட்டங்களை
ذَوَاتَىْ
உடைய
أُكُلٍ
பழங்கள்
خَمْطٍ
துர்நாற்றமுள்ள
وَأَثْلٍ
இன்னும் காய்க்காத மரங்கள்
وَشَىْءٍ مِّن
இன்னும் மிகக் குறைவான சில இலந்தை மரங்களை

Fa-a''radoo fa-arsalnaa 'alaihim Sailal 'Arimi wa baddalnaahum bijannataihim jannataini azwaatai ukulin khamtinw wa aslinw wa shai'im min sidrin qaleel

எனினும், அவர்கள் (அதனைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தான தொரு ஏரியை உடைக்கக் கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பி வைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களையும், சில இலந்தை மரங்களையும் கொண்ட தோப்புகளாக மாற்றிவிட்டோம்.

Tafseer

ذَٰلِكَ
இது
جَزَيْنَٰهُم
அவர்களுக்கு நாம் கூலி கொடுத்தோம்
بِمَا كَفَرُوا۟ۖ
அவர்கள் நிராகரித்ததற்காக
وَهَلْ نُجَٰزِىٓ
மற்றவர்களையா நாம் தண்டிப்போம்
إِلَّا
தவிர
ٱلْكَفُورَ
நிராகரிப்பாளர்களை

Zaalika jazainaahum bimaa kafaroo wa hal nujaazeee illal kafoor

நம்முடைய நன்றியை மறந்ததற்கு இதனை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம். நன்றி கெட்டவர் களுக்கன்றி (மற்றெவருக்கும் இத்தகைய) கூலியை நாம் கொடுப்போமா?

Tafseer

وَجَعَلْنَا
நாம் ஏற்படுத்தினோம்
بَيْنَهُمْ
அவர்களுக்கு இடையிலும்
وَبَيْنَ
இடையிலும்
ٱلْقُرَى
ஊர்களுக்கு
ٱلَّتِى بَٰرَكْنَا
நாம் அருள்வளம் புரிந்த
فِيهَا
அவற்றில்
قُرًى
பல ஊர்களை
ظَٰهِرَةً
தெளிவாகத் தெரியும்படியான
وَقَدَّرْنَا
நிர்ணயித்தோம்
فِيهَا
அவற்றில்
ٱلسَّيْرَۖ
பயணத்தை
سِيرُوا۟
பயணியுங்கள்
فِيهَا
அவற்றில்
لَيَالِىَ
பல இரவுகளும்
وَأَيَّامًا
பல பகல்களும்
ءَامِنِينَ
பாதுகாப்பு பெற்றவர்களாக

Wa ja'alnaa bainahum wa bainal qural latee baaraknaa feehaa quran zaahiratanw wa qaddamaa feehas sayr; seeroo feehaa la yaalirya wa aiyaaman aamineen

அவர்களுடைய ஊருக்கும் நாம் அருள்புரிந்த (ஸிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி அவைகளில் பாதைகளையும் அமைத்து "இரவு பகல் எந்த நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பிரயாணம் செய்யுங்கள்" (என்று கூறியிருந்தோம்).

Tafseer

فَقَالُوا۟
ஆனால் அவர்கள் கூறினர்
رَبَّنَا
எங்கள் இறைவா!
بَٰعِدْ
தூரத்தை ஏற்படுத்து!
بَيْنَ
மத்தியில்
أَسْفَارِنَا
எங்கள் பயணங்களுக்கு
وَظَلَمُوٓا۟
இன்னும் அநீதி இழைத்தனர்
أَنفُسَهُمْ
தங்களுக்குத் தாமே
فَجَعَلْنَٰهُمْ
ஆகவே, அவர்களை ஆக்கிவிட்டோம்
أَحَادِيثَ
பேசப்படக்கூடிய கதைகளாக
وَمَزَّقْنَٰهُمْ
அவர்களை கிழித்துவிட்டோம்
كُلَّ مُمَزَّقٍۚ
சுக்கு நூறாக
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கின்றன
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّكُلِّ
எல்லோருக்கும்
صَبَّارٍ
பெரும் பொறுமையாளர்(கள்)
شَكُورٍ
அதிகம் நன்றி செலுத்துகின்றவர்(கள்)

Faqaaloo Rabbanaa baa'id baina asfaarinaa wa zalamooo anfusahum faja'alnaahum ahaadeesa wa mazzaq naahum kulla mumazzaq; inna fee zaalika la Aayaatil likulli sabbaarin shakoor

ஆனால், அவர்கள் (இந்த நன்றியைப் புறக்கணித்து "தொடர்ச்சியாக ஊர்கள் இருப்பது எங்கள் பயணத்திற்கு இன்பம் அளிக்கவில்லை.) எங்கள் இறைவனே! எங்கள் பயணங்கள் நெடுந்தூரமாகும்படிச் செய்(வதற்காக மத்தியில் தொடர்ச்சியாக உள்ள இக்கிராமங்களை அழித்துவிடு)வாயாக!" என்று பிரார்த்தித்துத் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ஆகவே, (அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து) அவர்களையும் பல இடங்களுக்குச் சிதறடித்துப் பலரும் (இழிவாகப்) பேசக்கூடிய கதைகளாக்கி விட்டோம். பொறுமையுடையவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
صَدَّقَ
உண்மையாக்கினான்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
إِبْلِيسُ
இப்லீஸ்
ظَنَّهُۥ
தன் எண்ணத்தை
فَٱتَّبَعُوهُ
ஆகவே, அவர்கள் அவனை பின்பற்றினர்
إِلَّا
தவிர
فَرِيقًا
பிரிவினரை
مِّنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கைகொண்டவர்கள்

Wa laqad saddaq 'alaihim Ibleesu zannnabhoo fattaba'oohu illaa fareeqam minal mu'mineen

நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்றுவார்களென்று) இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை உண்மை என்றே அவன் கண்டு கொண்டான். ஆகவே, நம்பிக்கை கொண்ட சிலரைத் தவிர (மற்ற) அவர்கள் அனைவரும் அவனையே பின்பற்றினார்கள்.

Tafseer