Skip to main content

ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௨௩

اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِيْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِيَۙ تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ ۚ ثُمَّ تَلِيْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰى ذِكْرِ اللّٰهِ ۗذٰلِكَ هُدَى اللّٰهِ يَهْدِيْ بِهٖ مَنْ يَّشَاۤءُ ۗوَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ  ( الزمر: ٢٣ )

Allah
ٱللَّهُ
அல்லாஹ்
has revealed
نَزَّلَ
இறக்கினான்
(the) best
أَحْسَنَ
மிக அழகிய
(of) [the] statement
ٱلْحَدِيثِ
பேச்சை
a Book
كِتَٰبًا
ஒரு வேதமாக
(its parts) resembling each other
مُّتَشَٰبِهًا
ஒன்றுக்கொன்று ஒப்பான
oft-repeated
مَّثَانِىَ
பலமுறை ஓதப்படுகின்ற
Shiver
تَقْشَعِرُّ
சிலிர்க்கின்றன
from it (the) skins
مِنْهُ جُلُودُ
அதனால்/தோல்கள்
(of) those who
ٱلَّذِينَ
எவர்கள்
fear
يَخْشَوْنَ
பயப்படுவார்கள்
their Lord
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
then
ثُمَّ
பிறகு
relax
تَلِينُ
மென்மையாகின்றன
their skins
جُلُودُهُمْ
அவர்களின் தோல்கள்
and their hearts
وَقُلُوبُهُمْ
இன்னும் அவர்களின் உள்ளங்களும்
at (the) remembrance
إِلَىٰ ذِكْرِ
நினைவின் பக்கம்
(of) Allah
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
That
ذَٰلِكَ
இதுதான்
(is the) guidance
هُدَى
நேர்வழியாகும்
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
He guides
يَهْدِى
நேர்வழி செலுத்துகின்றான்
with it
بِهِۦ
இதன்மூலம்
whom He wills
مَن يَشَآءُۚ
தான் நாடியவர்களை
And whoever
وَمَن
எவரை
Allah lets go astray
يُضْلِلِ
வழிகெடுக்கின்றானோ
Allah lets go astray
ٱللَّهُ
அல்லாஹ்
then not for him
فَمَا لَهُۥ
அவருக்கு இல்லை
any guide
مِنْ هَادٍ
நேர்வழி காட்டுபவர் யாரும்

Allahu nazzala ahsanal hadeesi Kitaabam mutashaa biham masaaniy taqsha'irru minhu juloodul lazeena yakhshawna Rabbahum summa taleenu julooduhum wa quloo buhum ilaa zikril laah; zaalika hudal laahi yahdee bihee mai yashaaa'; wa mai yudlilil laahu famaa lahoo min haad (az-Zumar 39:23)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் அழகான விஷயங்களையே (இந்த) வேதத்தில் இறக்கி இருக்கின்றான். (இதிலுள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல்) ஒன்றை மற்றொன்று ஒத்ததாக (இருப்பதுடன், மனதில் பதிவதற்காக ஒரே விஷயத்தை) மென்மேலும் (பல வகையில்) கூறப்பட்டுள்ளது. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ, (அவர்கள் அதனைக் கேட்ட மாத்திரத்தில்) அவர்களுடைய உரோமம் சிலிர்த்து விடுகிறது. பின்னர், அவர்களுடைய தேகங்களும், உள்ளங்களும் இளகி அல்லாஹ்வைத் தியானம் செய்ய ஆரம்பிக்கின்றன. இதுவே அல்லாஹ்வினுடைய நேரான வழியாகும். அல்லாஹ் விரும்பியவர்களை இதன் மூலம் நேரான வழியில் செலுத்துகிறான். எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவனை, நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.

English Sahih:

Allah has sent down the best statement: a consistent Book wherein is reiteration. The skins shiver therefrom of those who fear their Lord; then their skins and their hearts relax at the remembrance [i.e., mention] of Allah. That is the guidance of Allah by which He guides whom He wills. And one whom Allah sends astray – for him there is no guide. ([39] Az-Zumar : 23)

1 Jan Trust Foundation

அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன; தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.