Skip to main content
bismillah

تَنزِيلُ
இறக்கப்பட்டது
ٱلْكِتَٰبِ
வேதமாகும்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
ٱلْعَزِيزِ
மிகைத்தவனும்
ٱلْحَكِيمِ
மகா ஞானவானுமான

Tanzeelul Kitaabi minal laahil 'Azeezil Hakeem

அல்லாஹ்வினால்தான் இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைவரையும் அறிந்த) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَنزَلْنَآ
இறக்கினோம்
إِلَيْكَ
உமக்கு
ٱلْكِتَٰبَ
இந்த வேதத்தை
بِٱلْحَقِّ
உண்மையுடன்
فَٱعْبُدِ
ஆகவே, வணங்குவீராக
ٱللَّهَ
அல்லாஹ்வை
مُخْلِصًا
தூய்மைப்படுத்தியவராக
لَّهُ
அவனுக்கு
ٱلدِّينَ
வழிபாட்டை

Innaaa anzalnaaa ilaikal Kitaaba bilhaqqi fa'budil laaha mukhlisal lahud deen

(நபியே!) நிச்சயமாக நாம், உங்களளவில் இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கின்றோம். ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வாருங்கள்.

Tafseer

أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
ٱلدِّينُ
வழிபாடுகள்
ٱلْخَالِصُۚ
பரிசுத்தமான(து)
وَٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டார்கள்
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
أَوْلِيَآءَ
தெய்வங்களை
مَا
நாங்கள்வணங்குவதில்லை
نَعْبُدُهُمْ
நாங்கள்வணங்குவதில்லை அவர்களை
إِلَّا
தவிர
لِيُقَرِّبُونَآ
அவர்கள் எங்களை நெருக்கமாக்குவதற்காக
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
زُلْفَىٰٓ
அந்தஸ்தால்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
فِى مَا
அவர்கள் தர்க்கிப்பவற்றில்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
مَنْ
எவர்
هُوَ
அவர்
كَٰذِبٌ
பொய்யர்களை
كَفَّارٌ
நிராகரிப்பாளர்களை

Alaa lillaahid deenul khaalis; wallazeenat takhazoo min dooniheee awliyaaa'a maa na'buduhum illaa liyuqar riboonaaa ilal laahi zulfaa; innal laaha yahkumu baina hum fee maa hum feehi yakhtalifoon; innal laaha laa yahdee man huwa kaazibun kaffaar

பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை, தங்களுக்குப் பாதுகாவலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், "அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவைகளை வணங்கவில்லை" (என்று கூறுகின்றனர்). அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை.

Tafseer

لَّوْ أَرَادَ
நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
أَن يَتَّخِذَ
எடுத்துக்கொள்ள
وَلَدًا
ஒரு குழந்தையை
لَّٱصْطَفَىٰ
தேர்ந்தெடுத்து இருப்பான்
مِمَّا يَخْلُقُ
தான் படைத்தவற்றில்
مَا يَشَآءُۚ
தான் நாடுவதை
سُبْحَٰنَهُۥۖ
அவன் மகா பரிசுத்தமானவன்
هُوَ
அவன்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْوَٰحِدُ
ஒருவன்
ٱلْقَهَّارُ
அடக்கி ஆளுபவன்

Law araadal laahu aiyattakhiza waladal lastafaa mimmaa yakhluqu maa yashaaa'; Subhaanahoo Huwal laahul Waahidul Qahhaar

அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பி இருந்தால், அவன் படைத்தவைகளில் அவன் விரும்பிய (மேலான)வைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான். (எனினும், இத்தகைய விஷயங்களிலிருந்து) அவன் மிக பரிசுத்தமானவன். அல்லாஹ் ஒரே ஒருவன்தான். (அவனுக்குச் சந்ததி இல்லை. அனைவரையும்) அவன் அடக்கி ஆளுகிறான்.

Tafseer

خَلَقَ
அவன் படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
பூமியை
بِٱلْحَقِّۖ
உண்மையான காரணத்திற்காக
يُكَوِّرُ
சுருட்டுகின்றான்
ٱلَّيْلَ
இரவை
عَلَى ٱلنَّهَارِ
பகல் மீது
وَيُكَوِّرُ
இன்னும் சுருட்டுகின்றான்
ٱلنَّهَارَ
பகலை
عَلَى ٱلَّيْلِۖ
இரவின் மீது
وَسَخَّرَ
அவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான்
ٱلشَّمْسَ
சூரியனை
وَٱلْقَمَرَۖ
சந்திரனை
كُلٌّ
எல்லாம்
يَجْرِى
ஓடுகின்றன
لِأَجَلٍ
ஒரு தவணையை நோக்கி
مُّسَمًّىۗ
குறிப்பிட்ட
أَلَا هُوَ
அறிந்து கொள்ளுங்கள்/அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْغَفَّٰرُ
மகா மன்னிப்பாளன்

Khalaqas samaawaati wal arda bilhaqq; yukawwirul laila 'alan nahaari wa yukawwirun nahaara 'alaal laili wa sakhkharash shamsa walqamara kulluny yajree li ajalim musammaa; alaa Huwal 'Azeezul Ghaffaar

அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கின்றான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை (விரிக்கிறான்.) அவனே பகலைச் சுருட்டி இரவை (விரிக்கிறான்.) சூரியனையும், சந்திரனையும் அடக்கி வைத்திருக்கின்றான். இவை ஒவ்வொன்றும், அவைகளுக்குக் (குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட காலப்படி நடக்கின்றன. (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் அனைவரையும் மிகைத்தவனும் மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

خَلَقَكُم
அவன் உங்களைப் படைத்தான்
مِّن نَّفْسٍ
ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து
ثُمَّ جَعَلَ
பிறகு/படைத்தான்
مِنْهَا
அதில் இருந்து
زَوْجَهَا
அதன் ஜோடியை
وَأَنزَلَ
இன்னும் உருவாக்கினான்
لَكُم
உங்களுக்காக
مِّنَ ٱلْأَنْعَٰمِ
கால்நடைகளில்
ثَمَٰنِيَةَ
எட்டு
أَزْوَٰجٍۚ
ஜோடிகளை
يَخْلُقُكُمْ
அவன் உங்களை படைக்கின்றான்
فِى بُطُونِ
வயிற்றில்
أُمَّهَٰتِكُمْ
உங்கள் தாய்மார்களின்
خَلْقًا
ஒரு படைப்பாக
مِّنۢ بَعْدِ
பின்னர்
خَلْقٍ
ஒரு படைப்புக்கு
فِى ظُلُمَٰتٍ
இருள்களில்
ثَلَٰثٍۚ
மூன்று
ذَٰلِكُمُ
அவன்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
رَبُّكُمْ
உங்கள் இறைவனாகிய
لَهُ
அவனுக்கே
ٱلْمُلْكُۖ
ஆட்சி அனைத்தும்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
فَأَنَّىٰ
ஆகவே எவ்வாறு
تُصْرَفُونَ
நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்

Khalaqakum min nafsinw waahidatin summa ja'ala minhaa zawjahaa wa anzala lakum minal-an'aami samaani yata azwaaj; yakhuluqukum fee butooni ummahaatikum khalqam mim ba'di khalqin fee zulumaatin salaas; zaalikumul laahu Rabbukum lahul mulk; laaa ilaaha illaa Huwa fa annaa tusrafoon

அவன் உங்கள் அனைவரையும், ஆரம்பத்தில் ஒரே மனிதரிலிருந்து படைத்தான். பின்னர், அவரிலிருந்து அவருடைய மனைவியை அமைத்தான். (அந்த இருவரிலிருந்து, உங்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருக்கின்றான்.) அன்றி, (உங்களுடைய நன்மைக்காகவே) எட்டு வகை கால்நடைகளை (ஜோடி ஜோடியாகப்) படைத்திருக்கின்றான். உங்கள் தாய்மார்களின் வயிற்றில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கின்றான். இந்த அல்லாஹ்வே உங்கள் இறைவன். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்?

Tafseer

إِن تَكْفُرُوا۟
நீங்கள் நிராகரித்தால்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَنِىٌّ
தேவையற்ற முழு நிறைவானவன்
عَنكُمْۖ
உங்களை விட்டு
وَلَا يَرْضَىٰ
அவன் விரும்ப மாட்டான்
لِعِبَادِهِ
தனது அடியார்களுக்கு
ٱلْكُفْرَۖ
நிராகரிப்பை
وَإِن تَشْكُرُوا۟
நீங்கள் நன்றி செலுத்தினால்
يَرْضَهُ
அதை அவன் விரும்புவான்
لَكُمْۗ
உங்களுக்கு
وَلَا تَزِرُ
சுமக்காது
وَازِرَةٌ
பாவியான ஓர் ஆன்மா
وِزْرَ
பாவத்தை
أُخْرَىٰۗ
இன்னொரு ஆன்மாவின்
ثُمَّ إِلَىٰ
பிறகு உங்கள் இறைவன் பக்கமே
مَّرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம் இருக்கின்றது
فَيُنَبِّئُكُم
அவன் உங்களுக்கு அறிவிப்பான்
بِمَا كُنتُمْ
நீங்கள் செய்து கொண்டிருந்ததை
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளதை

In takfuroo fa innal laaha ghaniyyun 'ankum; wa laa yardaa li'ibaadihil kufra wa in tashkuroo yardahu lakum; wa laa taziru waaziratunw wizra ukhraa; summa ilaa Rabikum marji'ukum fa-yunabbi'ukum bimaa kuntum ta'maloon; innahoo 'aleemum bizaatissudoor

அவனை நீங்கள் நிராகரித்துவிட்டபோதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவையற்றவனாக இருக்கின்றான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந் தவைகளை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவைகளையும் நிச்சயமாக அவன் நன்கறிகின்றான்.

Tafseer

وَإِذَا مَسَّ
ஏற்பட்டால்
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
ضُرٌّ
ஒரு தீங்கு
دَعَا
பிரார்திக்கின்றான்
رَبَّهُۥ
தான் இறைவனை
مُنِيبًا
முற்றிலும் திரும்பியவனாக
إِلَيْهِ
அவன் பக்கம்
ثُمَّ إِذَا
பிறகு/அவனுக்கு அவன் வழங்கினான்
نِعْمَةً
ஓர் அருளை
مِّنْهُ
தான் புறத்திலிருந்து
نَسِىَ
அவன் விட்டு விடுகிறான்
مَا كَانَ
நான் பிரார்த்தித்து வந்ததை
إِلَيْهِ
அவனிடம்
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்துகிறான்
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
أَندَادًا
இணைகளை
لِّيُضِلَّ
வழிகெடுப்பதற்காக
عَن سَبِيلِهِۦۚ
அவனுடைய பாதையை விட்டு
قُلْ
கூறுவிராக
تَمَتَّعْ
நீ சுகமடைந்து கொள்
بِكُفْرِكَ قَلِيلًاۖ
உனது நிராகரிப்பை கொண்டு/கொஞ்ச காலம்
إِنَّكَ
நிச்சயமாக நீ
مِنْ أَصْحَٰبِ
நரகவாசிகளில்

Wa izaa massal insaana durrun da'aa Rabbahoo muneeban ilaihi summa izaa khawwalahoo ni'matam minhu nasiya maa kaana yad'ooo ilaihi min qablu wa ja'ala lillaahi andaadal liyudilla 'ansabeelih; qul tamatta' bikufrika qaleelan innaka min Ashaabin Naar;

மனிதனுக்கு யாதொரு தீங்கு ஏற்படும் சமயத்தில், முற்றிலும் தன் இறைவனையே நோக்கிப் பிரார்த்தனை செய்த வண்ணமாயிருக்கின்றான். இறைவன் தன்னுடைய யாதொரு அருளை அவனுக்குப் புரியும் சமயத்தில், இதற்கு முன்னர், தான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அவனையே மறந்து, அவனுக்கு (பொய்யான தெய்வங்களை) இணையாக்கி மற்றவர்களையும் அவனுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கின்றான். (நபியே! அவனை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: "நீ (இவ்வாறு இறைவனை) நிராகரித்த வண்ணமே சிறிது காலம் சுகமனுபவி. (முடிவில்) நிச்சயமாக நீ நரகவாசிதான்."

Tafseer

أَمَّنْ هُوَ
?/எவர்/அவர்/வணங்கக்கூடியவர்
ءَانَآءَ ٱلَّيْلِ
இரவு நேரங்களில்
سَاجِدًا
சிரம் பணிந்தவராக(வும்)
وَقَآئِمًا
நின்றவராகவும்
يَحْذَرُ
பயப்படுகிறார்
ٱلْءَاخِرَةَ
மறுமையை
وَيَرْجُوا۟
இன்னும் ஆதரவு வைக்கிறார்
رَحْمَةَ
அருளை
رَبِّهِۦۗ
தன் இறைவனின்
قُلْ
கூறுவீராக!
هَلْ يَسْتَوِى
சமமாவார்களா?
ٱلَّذِينَ يَعْلَمُونَ
அறிந்தவர்களும்
وَٱلَّذِينَ لَا
அறியாதவர்களும்
إِنَّمَا يَتَذَكَّرُ
நல்லுபதேசம் பெறுவதெல்லாம்
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்கள்தான்

Amman huwa qaanitun aanaaa'al laili saajidanw wa qaaa'imai yahzarul Aakhirata wa yarjoo rahmata Rabbih; qul hal yastawil lazeena ya'lamoona wallazeena laa ya'lamoon; innamaa yatazakkaru ulul albaab

எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்த வனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ, (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) நீங்கள் கேளுங்கள்: கல்வி அறிவுடையவனும், கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தாம்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
يَٰعِبَادِ
என் அடியார்களே!
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்!
رَبَّكُمْۚ
உங்கள் இறைவனை
لِلَّذِينَ أَحْسَنُوا۟
நன்மை செய்தவர்களுக்கு
فِى هَٰذِهِ
இவ்வுலகில்
حَسَنَةٌۗ
நன்மை
وَأَرْضُ
இன்னும் பூமி
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَٰسِعَةٌۗ
விசாலமானது
إِنَّمَا يُوَفَّى
வழங்கப்படுவதெல்லாம்
ٱلصَّٰبِرُونَ
பொறுமையாளர்களுக்கு
أَجْرَهُم
கூலி அவர்களது
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றிதான்

Qul yaa 'ibaadil lazeena aamanut taqoo Rabbakum; lillazeena ahsanoo fee haazihid dunyaa hasanah; wa ardul laahi waasi'ah; innamaa yuwaffas saabiroona ajrahum bighayri hisab

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நம்பிக்கை கொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துஜ்ஜுமர்
القرآن الكريم:الزمر
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Az-Zumar
ஸூரா:39
வசனம்:75
Total Words:1270
Total Characters:4908
Number of Rukūʿs:8
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:59
Starting from verse:4058