Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧௯

وَّلَاُضِلَّنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّٰهِ ۚ وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا   ( النساء: ١١٩ )

"And I will surely mislead them
وَلَأُضِلَّنَّهُمْ
இன்னும் நிச்சயம் வழிகெடுப்பேன்/அவர்கû ள
and surely arouse desires in them
وَلَأُمَنِّيَنَّهُمْ
இன்னும் நிச்சயமாக வீண் நம்பிக்கையூட்டுவேன்/அவர்களுக்கு
and surely I will order them
وَلَءَامُرَنَّهُمْ
இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு
so they will surely cut off
فَلَيُبَتِّكُنَّ
ஆகவே நிச்சயம் அறுப்பார்கள்
(the) ears
ءَاذَانَ
காதுகளை
(of) the cattle
ٱلْأَنْعَٰمِ
கால்நடைகளின்
and surely I will order them
وَلَءَامُرَنَّهُمْ
இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு
so they will surely change
فَلَيُغَيِّرُنَّ
நிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள்
(the) creation
خَلْقَ
படைப்புகளை
(of) Allah"
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
And whoever
وَمَن
எவன்
takes
يَتَّخِذِ
எடுத்துக் கொள்வான்
the Shaitaan
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தானை
(as) a friend
وَلِيًّا
நண்பனாக, பாதுகாவலனாக
from besides Allah
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
then surely he (has) lost
فَقَدْ خَسِرَ
திட்டமாகநஷ்டமடைந்தான்
a loss
خُسْرَانًا
நஷ்டம்
manifest
مُّبِينًا
பகிரங்கமானது

Wa la udillannahum wa la umanni yannnahum wa la aamurannahum fala yubat tikunna aazaanal lan'aami wa la aamurannahum fala yughai yirunna khalqal laah; wa mai yattakhizish Shaitaana waliyyam mmin doonil laahi faqad khasira khusraanam mubeena (an-Nisāʾ 4:119)

Abdul Hameed Baqavi:

அன்றி "நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டுபண்ணி (பிசாசு களுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ் லிவின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்" (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி (இத்தகைய) ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கின்றானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்து விடுவான்.

English Sahih:

And I will mislead them, and I will arouse in them [sinful] desires, and I will command them so they will slit the ears of cattle, and I will command them so they will change the creation of Allah." And whoever takes Satan as an ally instead of Allah has certainly sustained a clear loss. ([4] An-Nisa : 119)

1 Jan Trust Foundation

“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.