وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِيْٓ اَقْتُلْ مُوْسٰى وَلْيَدْعُ رَبَّهٗ ۚاِنِّيْٓ اَخَافُ اَنْ يُّبَدِّلَ دِيْنَكُمْ اَوْ اَنْ يُّظْهِرَ فِى الْاَرْضِ الْفَسَادَ ( غافر: ٢٦ )
Wa qaala Fir'awnu zarooneee aqtul Moosaa walyad'u Rabbahoo inneee akhaafu ai yubaddila deenakum aw ai yuzhira fil ardil fasaad (Ghāfir 40:26)
Abdul Hameed Baqavi:
அன்றி, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) "என்னை(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள். நான் மூஸாவைக் கொலை செய்து விடுகிறேன். அவர் (தன்னை காத்துக்கொள்ள) தன் இறைவனை அழைக்கட்டும். நிச்சயமாக அவர் உங்களுடைய மார்க்கத்தையே மாற்றி விடக்கூடும்; அல்லது பூமியில் விஷமத்தைப் பரப்பிவிடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன்" என்றும் கூறினான்.
English Sahih:
And Pharaoh said, "Let me kill Moses and let him call upon his Lord. Indeed, I fear that he will change your religion or that he will cause corruption in the land." ([40] Ghafir : 26)
1 Jan Trust Foundation
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்| “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று.