Skip to main content
bismillah

حمٓ
ஹா மீம்

Haa-Meeem

ஹா; மீம்.

Tafseer

تَنزِيلُ
இறக்கப்பட்டது
ٱلْكِتَٰبِ
இந்த வேதம்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
ٱلْعَلِيمِ
நன்கறிந்தவன்

Tanzeelul Kitaabi minal laahil Azeezil 'Aleem

(இது அனைவரையும்) மிகைத்தவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதம்.

Tafseer

غَافِرِ
மன்னிப்பவன்
ٱلذَّنۢبِ
பாவங்களை
وَقَابِلِ
இன்னும் அங்கீகரிப்பவன்
ٱلتَّوْبِ
திருந்தி மன்னிப்புக் கோருவதை
شَدِيدِ
கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
ذِى ٱلطَّوْلِۖ
அருள் உடையவன்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
إِلَيْهِ
அவன் பக்கமே
ٱلْمَصِيرُ
மீளுமிடம்

Ghaafiriz zambi wa qaabilit tawbi shadeedil 'iqaabi zit tawli laaa ilaaha illaa Huwa ilaihil maseer

அவன் (குற்றவாளிகளுடைய) மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து பாவங்களை மன்னிப்பவன். (மனமுரண்டாக குற்றம் புரியும் பாவிகளை) வேதனை செய்வதிலும் கடினமானவன். (நல்லவர்கள் மீது) அருள் புரிபவன். அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறொரு இறைவன் இல்லை. அவனிடம் (அனைவரும் விசாரணைக்காகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது.

Tafseer

مَا يُجَٰدِلُ
விவாதம் செய்ய மாட்டார்(கள்)
فِىٓ ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِلَّا
தவிர
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களை
فَلَا يَغْرُرْكَ
ஆகவே, உம்மை மயக்கிவிட வேண்டாம்
تَقَلُّبُهُمْ
அவர்கள் சுற்றித்திரிவது
فِى ٱلْبِلَٰدِ
நகரங்களில்

Maa yujaadilu feee Aayaatil laahi illal lazeena kafaroo falaa yaghrurka taqallubuhum fil bilaad

(நபியே!) நிராகரிப்பவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே! வீணாகத் தர்க்கிக்கும்) அவர்கள் பல நகரங்களிலும் (ஆடம்பரத்துடன் சுகபோகமாகச்) சுற்றித் திரிவது உங்களை மயக்கிவிட வேண்டாம்.

Tafseer

كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
قَوْمُ
மக்களும்
نُوحٍ
நூஹூடைய
وَٱلْأَحْزَابُ
இராணுவங்களும்
مِنۢ بَعْدِهِمْۖ
அவர்களுக்குப் பின்னர்
وَهَمَّتْ
இன்னும் நாடினார்கள்
كُلُّ
எல்லா
أُمَّةٍۭ
சமுதாயத்தினரும்
بِرَسُولِهِمْ
தங்களது தூதரை
لِيَأْخُذُوهُۖ
அவரைதண்டிப்பதற்கு
وَجَٰدَلُوا۟
இன்னும் தர்க்கம் செய்தனர்
بِٱلْبَٰطِلِ
அசத்தியத்தைக் கொண்டு
لِيُدْحِضُوا۟
அவர்கள் அழிப்பதற்காக
بِهِ
அதன் மூலம்
ٱلْحَقَّ
சத்தியத்தை
فَأَخَذْتُهُمْۖ
ஆகவே, நான் அவர்களைப் பிடித்தேன்
فَكَيْفَ
எப்படி?
كَانَ
இருந்தது
عِقَابِ
எனது தண்டனை

Kazzabat qablahum qawmu Noohinw wal Ahzaabu mim ba'dihim wa hammat kullu ummatim bi Rasoolihim liyaa khuzoobhu wa jaadaloo bilbaatili liyudhidoo bihil haqqa fa akhaztuhum fakifa kaana 'iqaab

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய மக்களும், அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொரு கூட்டத்தினரும் (நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கித்) தங்களிடம் வந்த தூதர்களிடம் (குற்றம் கண்டு)பிடிக்கவே கருதினார்கள். அன்றி, சத்தியத்தை அழித்து விடுவதற்காகப் பொய்யான விஷயங்களைக் கொண்டு (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நாம் (வேதனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். ஆகவே, (அவர்களுக்கு) எத்தகைய தண்டனை கிடைத்தது என்பதைக் கவனிப்பீராக!

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
حَقَّتْ
உறுதியாகி விட்டது
كَلِمَتُ
வாக்கு
رَبِّكَ
உமது இறைவனின்
عَلَى ٱلَّذِينَ
நிராகரித்தவர்கள் மீது
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِ
நரகவாசிகள்

Wa kazaalika haqqat Kalimatu Rabbika 'alal lazeena kafarooo annahum Ashaabun Naar

இவ்வாறே இந்நிராகரிப்பவர்கள் மீதும், நிச்சயமாக இவர்கள் நரகவாசிகள்தாம் என்ற உங்களது இறைவனின் வாக்கு நிறைவேறியது.

Tafseer

ٱلَّذِينَ يَحْمِلُونَ
சுமப்பவர்களும்
ٱلْعَرْشَ
அர்ஷை
وَمَنْ حَوْلَهُۥ
அதைச் சுற்றி இருப்பவர்களும்
يُسَبِّحُونَ
துதிக்கின்றனர்
بِحَمْدِ
புகழை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
وَيُؤْمِنُونَ بِهِۦ
இன்னும் அவனை நம்பிக்கை கொள்கின்றனர்
وَيَسْتَغْفِرُونَ
இன்னும் பாவமன்னிப்புக் கோருகின்றனர்
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்காக
رَبَّنَا
எங்கள் இறைவா
وَسِعْتَ
நீ விசாலமடைந்து இருக்கின்றாய்
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
رَّحْمَةً
கருணையாலும்
وَعِلْمًا
இன்னும் கல்வியாலும்
فَٱغْفِرْ
ஆகவே மன்னிப்பாயாக!
لِلَّذِينَ تَابُوا۟
திருந்தி மன்னிப்புக் கோரியவர்களை
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினார்கள்
سَبِيلَكَ
உனது பாதையை
وَقِهِمْ
இன்னும் அவர்களை பாதுகாப்பாயாக!
عَذَابَ
வேதனையை விட்டு
ٱلْجَحِيمِ
நரகத்தின்

Allazeena yahmiloonal 'Arsha wa man hawlahoo yusabbihoona bihamdi Rabbihim wa yu'minoona bihee wa yastaghfiroona lillazeena aamanoo Rabbanaa wasi'ta kulla shai'ir rahmantanw wa 'ilman faghfir lillazeena taaboo wattaba'oo sabeelaka wa qihim 'azaabal Jaheem

எவர்கள், "அர்ஷை" சுமந்து கொண்டும், அதனைச் சூழவும் இருக்கின்றார்களோ அவர்கள், தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்தும், அவனை நம்பிக்கை கொண்டும், நம்பிக்கை கொண்டவர்களின் குற்றங்களை மன்னிக்கும்படி கோரியும் "எங்கள் இறைவனே! நீ ஞானத்தாலும் கருணையாலும் அனைவரையும்விட மிக்க விசாலமானவன். ஆகவே, (பாவங்களை விட்டு) விலகி உன்னுடைய வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையில் இருந்து நீ பாதுகாத்துக் கொள்வாயாக!" என்று பிரார்த்தித்துக் கொண்டும்,

Tafseer

رَبَّنَا
எங்கள் இறைவா!
وَأَدْخِلْهُمْ
இன்னும் அவர்களை நுழைப்பாயாக!
جَنَّٰتِ
சொர்க்கங்களில்
عَدْنٍ
அத்ன்
ٱلَّتِى وَعَدتَّهُمْ
எதை/அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றாய்
وَمَن صَلَحَ
நல்லவர்களாக இருந்தவர்களை
مِنْ ءَابَآئِهِمْ
அவர்களின் பெற்றோர்கள்
وَأَزْوَٰجِهِمْ
அவர்களின் மனைவிகள்
وَذُرِّيَّٰتِهِمْۚ
அவர்களின் சந்ததிகளில்
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Rabbannaa wa adkhilhum Jannaati 'adninil latee wa'attahum wa man salaha min aabaaa'ihim wa azwaajihim wa zurriyyaatihim; innaka Antal 'Azeezul Hakeem

"எங்கள் இறைவனே! நீ இவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவனபதிகளில் இவர்களையும் இவர்களுடைய மூதாதைகள், இவர்களுடைய மனைவிகள், இவர்களுடைய சந்ததிகள் ஆகிய இவர்களில் உள்ள நல்லவர்களையும் புகுத்துவாயாக! நிச்சயமாக நீ (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும் அறிந்த) ஞானமுடையவனுமாக இருக்கின்றாய்" என்றும்,

Tafseer

وَقِهِمُ
இன்னும் அவர்களை பாதுகாப்பாயாக!
ٱلسَّيِّـَٔاتِۚ
தீமைகளை விட்டு
وَمَن تَقِ
நீங்கள் எவரை பாதுகாப்பாயோ
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை விட்டு
يَوْمَئِذٍ
அன்றைய தினம்
فَقَدْ
திட்டமாக
رَحِمْتَهُۥۚ
அவர் மீது நீ கருணை புரிந்துவிட்டாய்
وَذَٰلِكَ هُوَ
அதுதான்
ٱلْفَوْزُ
வெற்றியாகும்
ٱلْعَظِيمُ
மகத்தான

Wa qihimus saiyi-aat; wa man taqis saiyi-aati Yawma'izin faqad rahimtah; wa zaalika huwal fawzul 'azeem

"அவர்களை எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள். அன்றைய தினம் எவர்களை நீ எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக் கொண்டாயோ, அவர்கள் மீது நிச்சயமாக நீ பேரருள் புரிந்துவிட்டாய்" என்று பிரார்த்திப்பார்கள். இதுதான் மிக மகத்தான பெரும் பாக்கியமாகும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்கள்
يُنَادَوْنَ
அழைக்கப்படுவார்கள்
لَمَقْتُ
கோபிப்பது
ٱللَّهِ
அல்லாஹ்
أَكْبَرُ
மிகப் பெரியது
مِن مَّقْتِكُمْ
நீங்கள் கோபிப்பதை விட
أَنفُسَكُمْ
உங்களை
إِذْ تُدْعَوْنَ
நீங்கள் அழைக்கப்பட்டபோது
إِلَى ٱلْإِيمَٰنِ
நம்பிக்கை கொள்வதற்கு
فَتَكْفُرُونَ
நிராகரித்தீர்கள்

Innal lazeena kafaroo yunaadawna lamaqtul laahi akbaru mim maqtikum anfusakum iz tud'awna ilal eemaani fatakfuroon

நிச்சயமாக எவர்கள் நிராகரித்து விட்டார்களோ, அவர்களை நோக்கி, "இன்றைய தினம் நீங்கள் உங்கள் ஆத்மாவை (நிந்தித்துக்) கோபிப்பதைவிட, (உங்கள் மீது) அல்லாஹ்வுடைய (நிந்தனையும்) கோபமும் மிகப் பெரியதாகும். ஏனென்றால், நீங்கள் நம்பிக்கையின் பக்கம் அழைக்கப்பட்ட சமயத்தில், அதனை நிராகரித்துவிட்டீர்கள்" என்று அவர்களை நோக்கிச் சப்தமிட்டுக் கூறப்படும்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் முஃமின்
القرآن الكريم:غافر
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Gafir
ஸூரா:40
வசனம்:85
Total Words:1990
Total Characters:4960
Number of Rukūʿs:9
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:60
Starting from verse:4133