Skip to main content

وَيَٰقَوْمِ
என் மக்களே
مَا لِىٓ
எனக்கு என்ன நேர்ந்தது
أَدْعُوكُمْ
நான் உங்களை அழைக்கிறேன்
إِلَى ٱلنَّجَوٰةِ
பாதுகாக்கப்படுவதற்கு
وَتَدْعُونَنِىٓ
நீங்களோ என்னை அழைக்கின்றீர்கள்
إِلَى ٱلنَّارِ
நரகத்தின் பக்கம்

Wa yaa qawmi maa leee ad'ookum ilan najaati wa tad'oonaneee ilan Naar

என்னுடைய மக்களே! எனக்கென்ன, (ஆச்சரியமாக இருக்கிறது!) நானோ உங்களை ஈடேற்றத்திற்கு அழைக்கின்றேன். நீங்கள் என்னை நரகத்திற்கு அழைக்கின்றீர்கள்.

Tafseer

تَدْعُونَنِى
நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள்
لِأَكْفُرَ
நான் நிராகரிப்பதற்கு(ம்)
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَأُشْرِكَ بِهِۦ
அவனுக்கு நான் இணைவைப்பதற்கும்
مَا لَيْسَ
எனக்கு அறிவில்லாத ஒன்றை
وَأَنَا۠ أَدْعُوكُمْ
நான்/அழைக்கின்றேன்/உங்களை
إِلَى ٱلْعَزِيزِ
மிகைத்தவன் பக்கம்
ٱلْغَفَّٰرِ
மகா மன்னிப்பாளன்

Tad'oonanee li-akfura billaahi wa ushrika bihee maa laisa lee bihee 'ilmunw wa ana ad'ookum ilal'Azeezil Ghaffaar

அன்றி, நான் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு (இறைவனென) நான் நம்பாததை அவனுக்கு இணைவைக்கும்படி என்னை நீங்கள் அழைக்கின்றீர்கள். நானோ, அனைவரையும் மிகைத்தவனும் மிக மன்னிப்புடையவனுமாகிய அவனிடம் உங்களை அழைக்கின்றேன்.

Tafseer

لَا جَرَمَ
கண்டிப்பாக
أَنَّمَا تَدْعُونَنِىٓ
நிச்சயமாக/எவை /நீங்கள் அழைக்கின்றீர்கள்/என்னை
إِلَيْهِ
அவற்றின் பக்கம்
لَيْسَ لَهُۥ
அவற்றுக்கு இல்லை
دَعْوَةٌ
எவ்வித பிரார்த்தனை
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகத்திலும்
وَلَا فِى
மறுமையிலும்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
مَرَدَّنَآ
நாம் திரும்புவது
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்தான்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱلْمُسْرِفِينَ
வரம்புமீறிகள்
هُمْ
அவர்கள்தான்
أَصْحَٰبُ ٱلنَّارِ
நரகவாசிகள்

Laa jarama annamaa tad'oonanee ilaihi laisa lahoo da'watun fid dunyaa wa laa fil Aakhirati wa anna maraddanaaa ilal laahi wa annal musrifeenahum Ashaabun Naar

என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி (இறைவனென்று) அழைப்பதற்கு ஒரு சிறிதும் நிச்சயமாக தகுதியற்றது என்பதில் சந்தேகமில்லை. அந்த அல்லாஹ்விடமே நாம் அனைவரும் திரும்பச் செல்வோம் (என்பதிலும் யாதொரு சந்தேகமில்லை). வரம்பு மீறுபவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் (என்பதிலும் யாதொரு சந்தேகமில்லை).

Tafseer

فَسَتَذْكُرُونَ
நீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள்
مَآ أَقُولُ
நான் கூறுவதை
لَكُمْۚ
உங்களுக்கு
وَأُفَوِّضُ
இன்னும் நான் ஒப்படைக்கிறேன்
أَمْرِىٓ
என் காரியத்தை
إِلَى ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
بَصِيرٌۢ
உற்று நோக்குகின்றான்
بِٱلْعِبَادِ
அடியார்களை

Fasatazkuroona maaa aqoolu lakum; wa ufawwidu amreee ilal laah; innallaaha baseerum bil'ibaad

நான் உங்களுக்குக் கூறுவதன் உண்மையை நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நீங்கள் (அறிந்து) நினைத்துப் பார்ப்பீர்கள். என்னுடைய எல்லா காரியங்களையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்).

Tafseer

فَوَقَىٰهُ
ஆக, அவரை பாதுகாத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
سَيِّـَٔاتِ
தீங்குகளை விட்டு
مَا مَكَرُوا۟ۖ
அவர்கள் செய்த சூழ்ச்சிகளின்
وَحَاقَ
இன்னும் சூழ்ந்துகொண்டது
بِـَٔالِ
குடும்பத்தார்களை
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின்
سُوٓءُ ٱلْعَذَابِ
கெட்ட வேதனை

Fa waqaahul laahu saiyiaati maa makaroo wa haaqa bi Aali-Fir'awna sooo'ul 'azaab

ஆகவே, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளிலிருந்து அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனை சூழ்ந்துகொண்டது.

Tafseer

ٱلنَّارُ
நரக நெருப்பாகும்
يُعْرَضُونَ عَلَيْهَا
அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்/அதில்
غُدُوًّا
காலையிலும்
وَعَشِيًّاۖ
மாலையிலும்
وَيَوْمَ تَقُومُ
நாள்/நிகழும்
ٱلسَّاعَةُ
மறுமை
أَدْخِلُوٓا۟
நுழையுங்கள்
ءَالَ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை
أَشَدَّ
கடுமையான
ٱلْعَذَابِ
வேதனையில்

An Naaru yu'radoona 'alaihaa ghuduwwanw wa 'ashiyyanw wa Yawma taqoomus Saa'aatu adkhilooo Aala Fir'awna ashaddal 'azaab

காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றனர். மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்.

Tafseer

وَإِذْ يَتَحَآجُّونَ
அவர்கள் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போது
فِى ٱلنَّارِ
நரகத்தில்
فَيَقُولُ
கூறுவார்கள்
ٱلضُّعَفَٰٓؤُا۟
பலவீனமானவர்கள்
لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟
பெருமை கொண்டிருந்தவர்களுக்கு
إِنَّا كُنَّا
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
لَكُمْ
உங்களை
تَبَعًا
பின்பற்றுபவர்களாக
فَهَلْ أَنتُم
ஆகவே நீங்கள் தடுப்பீர்களா?
عَنَّا
எங்களை விட்டு
نَصِيبًا
ஒரு பகுதியை
مِّنَ ٱلنَّارِ
நரகத்தில் இருந்து

Wa iz yatahaaajjoona fin Naari fa-yaqoolud du'afaaa'u lillazeenas takbarooo innaa kunnaa lakum taba'an fahal antum mughnoona annaa naseebam minan Naar

நரகத்தில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (அவர்களில் உள்ள) பலவீனமானவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்த (தலை)வர்களை நோக்கி "மெய்யாகவே நாங்கள் உங்களையே பின்பற்றியிருந்தோம். இன்றைய தினம் நீங்கள் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு சிறிதேனும் எங்களைவிட்டு நீங்கள் தடுத்துவிட முடியுமா?" என்று கேட்பார்கள்.

Tafseer

قَالَ
கூறுவார்(கள்)
ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟
பெருமை அடித்தவர்கள்
إِنَّا
நிச்சயமாக நாம்
كُلٌّ
எல்லோரும்
فِيهَآ
அதில்தான்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
قَدْ حَكَمَ
திட்டமாக தீர்ப்பளித்து விட்டான்
بَيْنَ ٱلْعِبَادِ
அடியார்களுக்கு மத்தியில்

Qaalal lazeenas takbarooo innaa kullun feehaaa innal laaha qad hakama baynal'ibaad

அதற்கு, பெருமையடித்துக் கொண்டிருந்த அ(வர்களுடைய தலை)வர்கள், "மெய்யாகவே (நாங்களும், நீங்களும் ஆக) நாம் அனைவரும் நரகத்தில்தான் இருக்கின்றோம். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு(ச் செய்ய வேண்டியதிருந்த) தீர்ப்பைச் செய்து விட்டான். (ஆகவே, உங்களுக்காக நாங்கள் ஒன்றும் உதவி செய்வதற்கில்லை)" என்று கூறுவார்கள்.

Tafseer

وَقَالَ
கூறுவார்(கள்)
ٱلَّذِينَ فِى
நரகத்தில் உள்ளவர்கள்
لِخَزَنَةِ
காவலாளிகளுக்கு
جَهَنَّمَ
நரகத்தின்
ٱدْعُوا۟
அழையுங்கள்!
رَبَّكُمْ
உங்கள் இறைவனை
يُخَفِّفْ
அவன் இலகுவாக்குவான்
عَنَّا
எங்களை விட்டு
يَوْمًا
ஒரு நாளாவது
مِّنَ ٱلْعَذَابِ
வேதனையை

Wa qaalal lazena fin Naari likhazanati Jahannamad-'oo Rabbakum yukhaffif 'annaa yawmam minal 'azaab

பின்னர், நரகத்திலுள்ளவர்கள் நரகத்தின் காவலாளர்களை நோக்கி "வேதனையை ஒரு நாளேனும் எங்களுக்கு இலேசாக்குமாறு உங்கள் இறைவனிடம் நீங்கள் கேளுங்கள்" எனக் கூறுவார்கள்.

Tafseer

قَالُوٓا۟
அவர்கள் கூறுவார்கள்
أَوَلَمْ تَكُ
உங்களிடம் வந்திருக்கவில்லையா?
رُسُلُكُم
உங்கள் தூதர்கள்
بِٱلْبَيِّنَٰتِۖ
தெளிவான அத்தாட்சிகளுடன்
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
بَلَىٰۚ
ஏன் வரவில்லை!
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
فَٱدْعُوا۟ۗ
நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள்
وَمَا دُعَٰٓؤُا۟
பிரார்த்தனை இல்லை
ٱلْكَٰفِرِينَ
காஃபிர்களின்
إِلَّا فِى
வழிகேட்டில் தவிர

Qaalooo awalam taku taateekum Rusulukum bilbaiyinaati qaaloo balaa' qaaloo fad'oo; wa maa du'aaa'ul kaafireena illaa fee dalaal

அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) "உங்களிடம் வந்த (இறைவனுடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வரவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள் "ஆம்! மெய்தான் (வந்தார்கள்)" என்று கூறுவார்கள். அதற்கவர்கள், "அவ்வாறாயின், (நாங்கள் இறைவனிடம் கேட்பதற்கில்லை.) நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறிவிடுவார்கள். இந்நிராகரிப் பவர்களின் பிரார்த்தனை யாதொரு பயனும் அளிக்காது.

Tafseer