Skip to main content

إِنَّا
நிச்சயமாக நாம்
لَنَنصُرُ
உதவுவோம்
رُسُلَنَا
நமது தூதர்களுக்கு(ம்)
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கும்
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையிலும்
ٱلدُّنْيَا
இவ்வுலக
وَيَوْمَ
நாளிலும்
يَقُومُ
நிற்கின்ற
ٱلْأَشْهَٰدُ
சாட்சிகள்

Innaa lanansuru Rusulanaa wallazeena aamanoo fil hayaatid dunyaa wa Yawma yaqoomul ashhaad

நிச்சயமாக நாம் நம்முடைய தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் உதவி செய்வோம். (இவர்களுக்காக) சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்.

Tafseer

يَوْمَ
(அந்)நாளில்
لَا يَنفَعُ
பலனளிக்காது
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
مَعْذِرَتُهُمْۖ
அவர்களின் சாக்குபோக்கு(கள்)
وَلَهُمُ
இன்னும் அவர்களுக்கு
ٱللَّعْنَةُ
சாபம்தான்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
سُوٓءُ ٱلدَّارِ
கெட்ட வீடும்

Yawma laa yanfa'uz zaalimeena ma'ziratuhum wa lahumul la'natu wa lahum soooud daar

அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் கூறும் புகல்கள் ஒன்றுமே பயனளிக்காது. அன்றி, அவர்களுக்கு (இறைவனின்) சாபமும் உண்டு; அவர்களுக்குத் தீய இருப்பிடமும் உண்டு.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
مُوسَى
மூஸாவிற்கு
ٱلْهُدَىٰ
நேர்வழியை
وَأَوْرَثْنَا
நாம் வாழையடி வாழையாகக் கொடுத்தோம்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை

Wa laqad aatainaa Moosal hudaa wa awrasnaa Baneee Israaa 'eelal Kitaab

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத் வேதமென்னும்) நேரான வழியைக் கொடுத்து, இஸ்ராயீலின் சந்ததிகளை அவ் வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கி வைத்தோம்.

Tafseer

هُدًى
நேர்வழியாக(வும்)
وَذِكْرَىٰ
உபதேசமாகவும்
لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்களுக்கு

Hudanw wa zikraa li ulil albaab

அது நேரான வழியாகவும் அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது. (எனினும், அதனை அவர்கள் சரிவர பின்பற்றவில்லை.)

Tafseer

فَٱصْبِرْ
ஆகவே, பொறுமை காப்பீராக!
إِنَّ
நிச்சயமாக
وَعْدَ ٱللَّهِ
அல்லாஹ்வின்வாக்கு
حَقٌّ
உண்மையானதே!
وَٱسْتَغْفِرْ
இன்னும் மன்னிப்புக்கேட்பீராக!
لِذَنۢبِكَ
உமது பாவங்களுக்காக
وَسَبِّحْ
இன்னும் துதிப்பீராக!
بِحَمْدِ
புகழ்ந்து
رَبِّكَ
உமது இறைவனை
بِٱلْعَشِىِّ
மாலையிலும்
وَٱلْإِبْكَٰرِ
காலையிலும்

Fasbir inna wa'dal laahi haqqunw wastaghfir lizambika wa sabbih bihamdi Rabbika bil'ashiyyi wal ibkaar

(நபியே!) நீங்கள் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டு பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. நீங்கள் உங்களுடைய தவறுகளுக்கு மன்னிப்பைக் கோரிக்கொண்டும், காலையிலும், மாலையிலும் உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருப்பீராக!

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ يُجَٰدِلُونَ
தர்க்கம் செய்பவர்கள்
فِىٓ ءَايَٰتِ
அத்தாட்சிகள் விஷயத்தில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
بِغَيْرِ سُلْطَٰنٍ
எவ்வித ஆதாரமும் இன்றி
أَتَىٰهُمْۙ
தங்களிடம் வந்த
إِن فِى
அவர்களின் உள்ளங்களில் இல்லை
إِلَّا
தவிர
كِبْرٌ
பெருமையை
مَّا هُم
அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது
فَٱسْتَعِذْ
ஆகவே, நீர் பாதுகாப்புத் தேடுவீராக!
بِٱللَّهِۖ
அல்லாஹ்விடம்
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْبَصِيرُ
உற்று நோக்குபவன்

Innal lazeena yujaadi loona feee Aayaatil laahi bighairi sultaanin ataahum in fee sudoorihim illaa kibrum maa hum bibaaligheeh; fasta'iz billaahi innahoo Huwas Samee'ul Baseer

நிச்சயமாக எவர்கள் தங்களிடம் யாதொரு ஆதாரமு மில்லாமல், (இருக்கும் நிலைமையில்) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கின்றார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உங்களை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீங்கள் கோருங்கள். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறு பவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَخَلْقُ
படைப்பதுதான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضِ
பூமியையும்
أَكْبَرُ
மிகப் பெரியது
مِنْ خَلْقِ
படைப்பதைவிட
ٱلنَّاسِ
மனிதர்களை
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَ
அதிகமானவர்கள்
ٱلنَّاسِ
மனிதர்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Lakhalqus samaawaati wal ardi akbaru min khalqin naasi wa laakinna aksaran naasi laa ya'lamoon

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, (இறந்த) மனிதர்களை (மறு முறை) படைப்பதைவிட நிச்சயமாக மிகப் பெரிய காரியமாகும். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இவ்வளவுகூட அறிந்து கொள்வதில்லை.

Tafseer

وَمَا يَسْتَوِى
சமமாக மாட்டார்(கள்)
ٱلْأَعْمَىٰ
குருடரும்
وَٱلْبَصِيرُ
பார்வையுள்ளவரும்
وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
وَلَا ٱلْمُسِىٓءُۚ
இன்னும் கெட்டவர்(கள்)
قَلِيلًا
மிகக் குறைவாகத்தான்
مَّا تَتَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்

Wa maa yastawil a'maa walbaseeru wallazeena aamanoo wa 'amilus saalihaati wa lal museee'; qaleelam maa tatazakkaroon

குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களும் (நம்பிக்கை கொள்ளாத) பாவிகளும் சமமாக மாட்டார்கள். வெகு சொற்பமாகவே இதனைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்.

Tafseer

إِنَّ ٱلسَّاعَةَ
நிச்சயமாக மறுமை
لَءَاتِيَةٌ
வந்தே தீரும்
لَّا رَيْبَ
அதில் எவ்வித சந்தேகமும் இல்லை
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَ
அதிகமானவர்கள்
ٱلنَّاسِ
மனிதர்களில்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Innas Saa'ata la aatiyatul laa raiba feehaa wa laakinna aksaran naasi laa yu'minoon

விசாரணைக் காலம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) நம்புவதில்லை.

Tafseer

وَقَالَ
கூறுகிறான்
رَبُّكُمُ
உங்கள் இறைவன்
ٱدْعُونِىٓ
என்னிடம் பிரார்த்தியுங்கள்!
أَسْتَجِبْ
நான் அங்கீகரிப்பேன்
لَكُمْۚ
உங்களுக்கு
إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ يَسْتَكْبِرُونَ
பெருமை அடிப்பவர்கள்
عَنْ عِبَادَتِى
எனது வணக்க வழிபாடுகளை விட்டு
سَيَدْخُلُونَ
நுழைவார்கள்
جَهَنَّمَ
நரகத்தில்
دَاخِرِينَ
சிறுமைப்பட்டவர்களாக

Wa qaala Rabbukumud 'ooneee astajib lakum; innal lazeena yastakbiroona an 'ibaadatee sa yadkhuloona jahannama daakhireen

உங்கள் இறைவன் கூறுகின்றான்: "நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.

Tafseer