Skip to main content

ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
جَعَلَ لَكُمُ
உங்களுக்கு ஆக்கினான்
ٱلَّيْلَ
இரவை
لِتَسْكُنُوا۟ فِيهِ
நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக(வும்)/அதில்
وَٱلنَّهَارَ
இன்னும் பகலை
مُبْصِرًاۚ
வெளிச்ச முள்ளதாக(வும்)
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَذُو فَضْلٍ
அருளுடையவன்
عَلَى ٱلنَّاسِ
மக்கள் மீது
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَ
அதிகமானவர்கள்
ٱلنَّاسِ
மனிதர்களில்
لَا يَشْكُرُونَ
நன்றி செலுத்தமாட்டார்கள்

Allaahul lazee ja'ala lakumul laila litqaskunoo feehi wannahaara mubsiraa; innal laaha lazoo fadlin 'alan naasi wa laakinna aksaran naasi laa yashkuroon

அல்லாஹ்தான், நீங்கள் (இளைப்பாறி) சுகமடைவதற்காக இரவையும், (வெளிச்சத்தால் பலவற்றையும்) நீங்கள் பார்க்கும்படி பகலையும் படைத்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது பேரருள் புரிகின்றான். ஆயினும், மனிதர்களில் பெரும் பாலானவர்கள் நன்றி செலுத்துவதில்லை.

Tafseer

ذَٰلِكُمُ ٱللَّهُ
அந்த அல்லாஹ்தான்
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
خَٰلِقُ
படைத்தவன்
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
لَّآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
فَأَنَّىٰ تُؤْفَكُونَ
எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்

Zaalikumul laahu Rabbukum khaaliqu kulli shai'; laaa ilaaha illaa Huwa fa annaa tu'fakoon

உங்களின் இத்தகைய இறைவனான அல்லாஹ்தான் (மற்ற) பொருள்கள் அனைத்தையும் படைப்பவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்?

Tafseer

كَذَٰلِكَ
இவ்வாறுதான்
يُؤْفَكُ
திருப்பப்பட்டார்(கள்)
ٱلَّذِينَ كَانُوا۟
எவர்கள்/இருந்தார்கள்
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يَجْحَدُونَ
மறுப்பவர்களாக

Kazaalika yu'fakul loazeena kaanoo bi Aayaatil laahi yajhadoon

அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்துக்கொண்டு (முன்னர்) இருந்தவர்களும், இவ்வாறுதான் வெருண்டோடிச் சென்றனர்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
جَعَلَ
அமைத்தான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْأَرْضَ
பூமியை
قَرَارًا
வசிப்பதற்கு வசதியாக
وَٱلسَّمَآءَ
இன்னும் வானத்தை
بِنَآءً
ஒரு கட்டிடமாக
وَصَوَّرَكُمْ
இன்னும் உங்களை உருவமைத்தான்
فَأَحْسَنَ
அழகாக்கினான்
صُوَرَكُمْ
உங்கள் உருவங்களை
وَرَزَقَكُم
இன்னும் உங்களுக்கு உணவளித்தான்
مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ
நல்ல உணவுகளில் இருந்து
ذَٰلِكُمُ ٱللَّهُ
அவன் தான் அல்லாஹ்
رَبُّكُمْۖ
உங்கள் இறைவனாகிய
فَتَبَارَكَ
மிக்க அருள்வளம் நிறைந்தவன்
ٱللَّهُ
அல்லாஹ்
رَبُّ
இறைவனாகிய
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Allaahul lazee ja'ala lakumul arda qaraaranw wassa maaa'a binaaa'anw wa sawwarakum fa ahsana suwarakum wa razaqakum minat taiyibaat; zaalikumul laahu Rabbukum fatabaarakal laahu Rabbul 'aalameen

அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசித்திருக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, உங்களைச் சித்தரித்து, அழகான கோலத்திலும் உங்களை அமைத்தான். அன்றி, அவனே உங்களுக்கு மேலான உணவு களையும் அளிக்கின்றான். அதே அல்லாஹ்தான் உங்கள் இறைவன். அகிலத்தார்களின் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியம் உடையவன்.

Tafseer

هُوَ
அவன்தான்
ٱلْحَىُّ
என்றும் உயிரோடு இருப்பவன்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا هُوَ
அவனைத் தவிர
فَٱدْعُوهُ
ஆகவே அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்
مُخْلِصِينَ
தூய்மைப்படுத்தியவர்களாக
لَهُ
அவனுக்கு
ٱلدِّينَۗ
வழிபாடுகளை
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
رَبِّ
இறைவனாகிய
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Huwal Hayyu laaa ilaaha illaa Huwa fad'oohu mukh liseena lahudeen; alhamdu lillaahi Rabbil 'aalameen

அவன் நிரந்தரமானவன்; அவனைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. ஆகவே, அவனுக்கு (மனிதர்களே!) நீங்கள் முற்றிலும் வழிப்பட்டுக் கலப்பற்ற மனதுடன் அவனை அழைப்பீர்களாக! உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அந்த அல்லாஹ்வுக்கு எல்லா புகழும் உரித்தானது" (என்றும் கூறுங்கள்.)

Tafseer

قُلْ
கூறுவீராக!
إِنِّى
நிச்சயமாக நான்
نُهِيتُ
தடுக்கப்பட்டு விட்டேன்
أَنْ أَعْبُدَ
நான் வணங்குவதற்கு
ٱلَّذِينَ تَدْعُونَ
நீங்கள் பிரார்த்திக்கின்றவர்களை
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
لَمَّا جَآءَنِىَ
என்னிடம்வந்துவிட்டபோது
ٱلْبَيِّنَٰتُ
தெளிவான அத்தாட்சிகள்
مِن رَّبِّى
என் இறைவனிடமிருந்து
وَأُمِرْتُ
நான் ஆணை இடப்பட்டுள்ளேன்
أَنْ أُسْلِمَ
நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும்
لِرَبِّ
இறைவனுக்கு
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Qul innee nuheetu an a'budal lazeena tad'oona min doonil laahi lammaa jaaa'a niyal biyinaatu mir Rabbee wa umirtu an uslima li Rabbil 'aalameen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் என்னிடம் வந்ததன் பின்னர், அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென) அழைப்பவைகளை நான் வணங்கக்கூடாதென்று நிச்சயமாகத் தடுக்கப்பட்டுள்ளேன். அன்றி, உலகத்தாரின் (அல்லாஹ்வாகிய) இறைவனுக்கே நான் முற்றிலும் வழிபட்டு நடக்கும்படியும் ஏவப்பட்டுள்ளேன்" (என்றும் கூறுங்கள்.)

Tafseer

هُوَ
அவன்
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
خَلَقَكُم
உங்களைப்படைத்தான்
مِّن تُرَابٍ
மண்ணிலிருந்து
ثُمَّ
பிறகு
مِن نُّطْفَةٍ
இந்திரியத்தில் இருந்து
ثُمَّ مِنْ
பிறகு/இரத்தக் கட்டியில் இருந்து
ثُمَّ
பிறகு
يُخْرِجُكُمْ
உங்களை வெளிக்கொண்டு வருகிறான்
طِفْلًا
குழந்தைகளாக
ثُمَّ
பிறகு
لِتَبْلُغُوٓا۟
நீங்கள் அடைவதற்காக
أَشُدَّكُمْ
வலிமையை உங்கள்
ثُمَّ
பிறகு
لِتَكُونُوا۟
நீங்கள்ஆகுவதற்காக
شُيُوخًاۚ
வயோதிகர்களாக
وَمِنكُم
உங்களில்
مَّن يُتَوَفَّىٰ
உயிர் கைப்பற்றப்படுபவரும்
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
وَلِتَبْلُغُوٓا۟
இன்னும் நீங்கள் அடைவதற்காக
أَجَلًا
ஒரு தவணையை
مُّسَمًّى
குறிப்பிட்ட(து)
وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ
இன்னும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காக

Huwal lazee khalaqakum min turaabin summa min nutfatin summa min 'alaqatin summa yukhrijukum tiflan summa litablughooo ashuddakum summa litakoonoo shuyookhaa; wa minkum mai yutawaffaa min qablu wa litablughooo ajalam musam manw-wa la'allakum ta'qiloon

அவன்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்தும் பின்னர், ஒரு இந்திரியத்துளியிலிருந்தும், பின்னர், கருவிலிருந்தும் படைத்தான். பிறகு அவனே உங்களை ஒரு சிசுவாகவும் வெளிப்படுத்துகிறான். பின்னர், (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் நீங்கள் முதியோராகின்றீர்கள். இதற்கு முன்னரும் உங்களில் பலர் இறந்துவிடுகின்றனர். ஆயினும், (உங்களில் ஒவ்வொருவரும்) குறிப்பிட்ட தவணையை அடைந்தே தீருகின்றீர்கள். இதனை நீங்கள் அறிந்துகொள்வீர்களாக!

Tafseer

هُوَ ٱلَّذِى
அவன்/ எப்படிப்பட்டவன்
يُحْىِۦ
உயிர்ப்பிக்கின்றான்
وَيُمِيتُۖ
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
فَإِذَا قَضَىٰٓ
அவன் முடிவு செய்துவிட்டால்
أَمْرًا
ஒரு காரியத்தை
فَإِنَّمَا يَقُولُ
அவன் கூறுவதெல்லாம்
لَهُۥ
அதற்கு
كُن
ஆகு
فَيَكُونُ
உடனே அது ஆகிவிடும்

Huwal lazee yuhyee wa yumeetu fa izaa qadaaa amran fa innamaa yaqoolu lahoo kun fa yakon

அவனே உயிர் கொடுக்கின்றான்; உயிர் வாங்குகின்றான். யாதொன்றை(ப் படைக்க) அவன் தீர்மானித்தால் அதனை "ஆகுக" என்று அவன் கூறியவுடன் அது ஆகிவிடுகின்றது.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
إِلَى ٱلَّذِينَ
தர்க்கம் செய்கின்றவர்களை
فِىٓ ءَايَٰتِ
அல்லாஹ்வின் வசனங்களில்
أَنَّىٰ يُصْرَفُونَ
அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகிறார்கள்

Alam tara ilal lazeena yujaadiloona feee Aayaatil laahi annaa yusrafoon

(நபியே!) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாக)த் தர்க்கிப்பவர்கள் எவ்வாறு (உண்மையை விட்டும்) திருப்பப் படுகின்றனர் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?

Tafseer

ٱلَّذِينَ كَذَّبُوا۟
பொய்ப்பித்தவர்கள்
بِٱلْكِتَٰبِ
வேதத்தை(யும்)
وَبِمَآ أَرْسَلْنَا
இன்னும் /எதைக் கொண்டு/நாம்அனுப்பினோமோ
بِهِۦ
அதைக் கொண்டு
رُسُلَنَاۖ
நமது தூதர்களை
فَسَوْفَ يَعْلَمُونَ
விரைவில் அறிந்து கொள்வார்கள்

Allazeena kazzaboo bil Kitaabi wa bimaa arsalnaa bihee Rusulanaa fasawfa ya'lamoon

எவர்கள் (நம்முடைய) இந்த வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்த (வேதத்)தையும் பொய்யாக்கு கின்றனரோ, அவர்கள் (பின்னர் அதனை உண்மை தானென்று) நிச்சயமாக அறிந்துகொள்வார்கள்.

Tafseer