Skip to main content

ஸூரத்துல் முஃமின் வசனம் ௫

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَّالْاَحْزَابُ مِنْۢ بَعْدِهِمْ ۖوَهَمَّتْ كُلُّ اُمَّةٍۢ بِرَسُوْلِهِمْ لِيَأْخُذُوْهُ وَجَادَلُوْا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ ۗفَكَيْفَ كَانَ عِقَابِ  ( غافر: ٥ )

Denied
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
before them
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
(the) people
قَوْمُ
மக்களும்
(of) Nuh
نُوحٍ
நூஹூடைய
and the factions
وَٱلْأَحْزَابُ
இராணுவங்களும்
after them after them
مِنۢ بَعْدِهِمْۖ
அவர்களுக்குப் பின்னர்
and plotted
وَهَمَّتْ
இன்னும் நாடினார்கள்
every
كُلُّ
எல்லா
nation
أُمَّةٍۭ
சமுதாயத்தினரும்
against their Messenger
بِرَسُولِهِمْ
தங்களது தூதரை
to seize him
لِيَأْخُذُوهُۖ
அவரைதண்டிப்பதற்கு
and they disputed
وَجَٰدَلُوا۟
இன்னும் தர்க்கம் செய்தனர்
by falsehood
بِٱلْبَٰطِلِ
அசத்தியத்தைக் கொண்டு
to refute
لِيُدْحِضُوا۟
அவர்கள் அழிப்பதற்காக
thereby
بِهِ
அதன் மூலம்
the truth
ٱلْحَقَّ
சத்தியத்தை
So I seized them
فَأَخَذْتُهُمْۖ
ஆகவே, நான் அவர்களைப் பிடித்தேன்
Then how
فَكَيْفَ
எப்படி?
was
كَانَ
இருந்தது
My penalty?
عِقَابِ
எனது தண்டனை

Kazzabat qablahum qawmu Noohinw wal Ahzaabu mim ba'dihim wa hammat kullu ummatim bi Rasoolihim liyaa khuzoobhu wa jaadaloo bilbaatili liyudhidoo bihil haqqa fa akhaztuhum fakifa kaana 'iqaab (Ghāfir 40:5)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய மக்களும், அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொரு கூட்டத்தினரும் (நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கித்) தங்களிடம் வந்த தூதர்களிடம் (குற்றம் கண்டு)பிடிக்கவே கருதினார்கள். அன்றி, சத்தியத்தை அழித்து விடுவதற்காகப் பொய்யான விஷயங்களைக் கொண்டு (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நாம் (வேதனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். ஆகவே, (அவர்களுக்கு) எத்தகைய தண்டனை கிடைத்தது என்பதைக் கவனிப்பீராக!

English Sahih:

The people of Noah denied before them and the [disbelieving] factions after them, and every nation intended [a plot] for their messenger to seize him, and they disputed by [using] falsehood to [attempt to] invalidate thereby the truth. So I seized them, and how [terrible] was My penalty. ([40] Ghafir : 5)

1 Jan Trust Foundation

இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?