Skip to main content

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௧௭

وَاَمَّا ثَمُوْدُ فَهَدَيْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰى عَلَى الْهُدٰى فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ۚ   ( فصلت: ١٧ )

And as for Thamud
وَأَمَّا ثَمُودُ
ஆக, ஸமூது சமுதாயம்
We guided them
فَهَدَيْنَٰهُمْ
அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம்
but they preferred
فَٱسْتَحَبُّوا۟
(ஆனால்) அதிகம் விரும்பினார்கள்
[the] blindness
ٱلْعَمَىٰ
குருட்டுத் தனத்தைத்தான்
over the guidance
عَلَى ٱلْهُدَىٰ
நேர்வழியை விட
so seized them
فَأَخَذَتْهُمْ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
a thunderbolt
صَٰعِقَةُ
பேரழிவு
(of) the punishment
ٱلْعَذَابِ
வேதனையின்
humiliating
ٱلْهُونِ
இழிவான
for what they used (to) earn
بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக

Wa ammaa Samoodu fahadinaahum fastahabbul 'ama 'alal huda fa akhazathum saa'iqatul 'azaabil hooni bimaa kaanoo yaksiboon (Fuṣṣilat 41:17)

Abdul Hameed Baqavi:

ஸமூது என்னும் மக்களோ, அவர்களுக்கும் நாம் (நம்முடைய தூதரை அனுப்பி) நேரான வழியை அறிவித்தோம். எனினும், அவர்களும் நேரான வழியில் செல்லாது குருடராய் இருப்பதையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக இழிவான வேதனையைக் கொண்டுள்ள இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.

English Sahih:

And as for Thamud, We guided them, but they preferred blindness over guidance, so the thunderbolt of humiliating punishment seized them for what they used to earn. ([41] Fussilat : 17)

1 Jan Trust Foundation

ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.