Man kaana yureedu harsal Aakhirati nazid lahoo fee harsihee wa man kaana yureedu harsad dunyaa nu'tihee mnhaa wa maa lahoo fil Aakhirati min naseeb (aš-Šūrā 42:20)
எவன் மறுமைக்காகப் பயிரிட விரும்புகின்றானோ, அவனுடைய பயிரின் விளைச்சலை நாம் அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகின்றானோ, நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.
English Sahih:
Whoever desires the harvest of the Hereafter – We increase for him in his harvest [i.e., reward]. And whoever desires the harvest [i.e., benefits] of this world – We give him thereof, but there is not for him in the Hereafter any share. ([42] Ash-Shuraa : 20)
1 Jan Trust Foundation
எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யார் மறுமையின் விளைச்சலை நாடுகின்றவராக இருப்பாரோ அவருக்கு அவருடைய விளைச்சலில் (-நன்மைக்குரிய கூலியில்) நாம் அதிகப்படுத்துவோம். யார் உலகத்தின் விளைச்சலை நாடுகின்றவராக இருப்பாரோ அவருக்கு அதில் இருந்து (-உலக ஆதாயத்தில் இருந்து) நாம் கொடுப்போம். அவருக்கு மறுமையில் (அவர் செய்த நன்மையில் இருந்து) எவ்வித பங்கும் இல்லை.