Skip to main content

ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௨௩

ذٰلِكَ الَّذِيْ يُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۗ قُلْ لَّآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰىۗ وَمَنْ يَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِيْهَا حُسْنًا ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ   ( الشورى: ٢٣ )

That
ذَٰلِكَ
இது
(is of) which Allah gives glad tidings
ٱلَّذِى يُبَشِّرُ
எது/நற்செய்தி கூறுகின்றான்
Allah gives glad tidings
ٱللَّهُ
அல்லாஹ்
(to) His slaves
عِبَادَهُ
தன் அடியார்களுக்கு
those who
ٱلَّذِينَ
எவர்கள்
believe
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
and do
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
righteous deeds
ٱلصَّٰلِحَٰتِۗ
நன்மைகளை
Say
قُل
கூறுவீராக!
"Not I ask you
لَّآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடத்தில் கேட்கவில்லை
for it
عَلَيْهِ
இதற்காக
any payment
أَجْرًا
எந்த கூலியையும்
except the love
إِلَّا ٱلْمَوَدَّةَ
அன்பைத் தவிர
among the relatives"
فِى ٱلْقُرْبَىٰۗ
உறவினால் உள்ள
And whoever earns
وَمَن يَقْتَرِفْ
யார் செய்வாரோ
any good
حَسَنَةً
அழகிய அமலை
We increase
نَّزِدْ
அதிகப்படுத்துவோம்
for him therein
لَهُۥ فِيهَا
அவருக்கு/அதில்
good
حُسْنًاۚ
அழகை
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) Oft-Forgiving
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
All-Appreciative
شَكُورٌ
நன்றியறிபவன்

Zaalikal lazee yubash shirul laahu 'ibaadahul lazeena aamanoo wa 'amilus saalihaat; qul laaa as'alukum 'alaihi ajran illal mawaddata fil qurbaa; wa mai yaqtarif hasanatan nazid lahoo feehaa husnaa; innal laaha Ghafoorun Shakoor (aš-Šūrā 42:23)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன்னுடைய (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே. (நபியே!) நீங்கள் கூறுங்கள்: இதற்காக நான் யாதொரு கூலியும் கேட்கவில்லை (என்று). "உறவினர்களை நேசிப்பதைத் தவிர, எவர் நற்செயல்களைத் தேடிக் கொள்கின்றாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் நன்மையை அதிகரிக்கச் செய்கின்றோம். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நன்றியை(யும்) அங்கீகரிப்ப வனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

It is that of which Allah gives good tidings to His servants who believe and do righteous deeds. Say, [O Muhammad], "I do not ask you for it [i.e., this message] any payment [but] only good will through [i.e., due to] kinship." And whoever commits a good deed – We will increase for him good therein. Indeed, Allah is Forgiving and Appreciative. ([42] Ash-Shuraa : 23)

1 Jan Trust Foundation

ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே| (நபியே!) நீர் கூறும்| “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.