வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், அவைகளில் கால்நடை (முதலிய பல உயிரினங்)களை (ஆங்காங்கு) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். ஆகவே, அவன் விரும்பியபோது (மரணித்த பின்னரும்) அவைகளை ஒன்று சேர்க்க ஆற்றுலுடையவனாக இருக்கின்றான்.
English Sahih:
And of His signs is the creation of the heavens and earth and what He has dispersed throughout them of creatures. And He, for gathering them when He wills, is competent. ([42] Ash-Shuraa : 29)
1 Jan Trust Foundation
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் உயிரினங்களை பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - ஆகவே, அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றலுடையவன்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களில் இருந்து அவ்விரண்டில் எவற்றை அவன் பரத்தி இருக்கின்றானோ அவையும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான். அவன் நாடுகின்ற போது அவர்களை (மறுமையில்) ஒன்று சேர்ப்பதற்கும் அவன் பேராற்றலுடையவன் ஆவான்.