Skip to main content

ஸூரத்துல் ஜாஸியா வசனம் ௨௩

اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةًۗ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ ۗ اَفَلَا تَذَكَّرُوْنَ  ( الجاثية: ٢٣ )

Have you seen
أَفَرَءَيْتَ
நீர் அறிவிப்பீராக!
(he) who takes
مَنِ ٱتَّخَذَ
எடுத்துக்கொண்டவனைப் பற்றி
(as) his god
إِلَٰهَهُۥ
தனது கடவுளாக
his desire
هَوَىٰهُ
தனது மனவிருப்பத்தை
and Allah lets him go astray
وَأَضَلَّهُ
அவனை வழிகெடுத்தான்
and Allah lets him go astray
ٱللَّهُ
அல்லாஹ்
knowingly knowingly
عَلَىٰ عِلْمٍ
அறிவு வந்ததன் பின்னர்
and He sets a seal
وَخَتَمَ
இன்னும் முத்திரையிட்டான்
upon his hearing
عَلَىٰ سَمْعِهِۦ
அவனது செவியிலும்
and his heart
وَقَلْبِهِۦ
அவனது உள்ளத்திலும்
and puts
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
over his vision
عَلَىٰ بَصَرِهِۦ
அவனது பார்வையில்
a veil?
غِشَٰوَةً
திரையை
Then who
فَمَن
ஆகவே, யார்
will guide him
يَهْدِيهِ
அவனுக்கு நேர்வழி காட்டுவார்
after after
مِنۢ بَعْدِ
பின்
Allah?
ٱللَّهِۚ
அல்லாஹ்விற்கு
Then will not you receive admonition?
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?

Afara'ayta manit takhaza ilaahahoo hawaahu wa adal lahul laahu 'alaa 'ilminw wa khatama 'alaa sam'ihee wa qalbihee wa ja'ala 'alaa basarihee ghishaawatan famany yahdeehi mim ba'dil laah; afalaa tazakkaroon (al-Jāthiyah 45:23)

Abdul Hameed Baqavi:

(நபியே!) தன்னுடைய உடல் ஆசையை இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக்கொண்ட ஒருவனை நீங்கள் கவனித்தீர்களா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டு, அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? (இதனை) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?

English Sahih:

Have you seen he who has taken as his god his [own] desire, and Allah has sent him astray due to knowledge and has set a seal upon his hearing and his heart and put over his vision a veil? So who will guide him after Allah? Then will you not be reminded? ([45] Al-Jathiyah : 23)

1 Jan Trust Foundation

(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?