அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) "மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்களுடைய மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்" என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை.
English Sahih:
And when Our verses are recited to them as clear evidences, their argument is only that they say, "Bring [back] our forefathers, if you should be truthful." ([45] Al-Jathiyah : 25)
1 Jan Trust Foundation
அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்” என்பது தவிர வேறில்லை.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் மீது நமது வசனங்கள் தெளிவான ஆதாரங்களாக ஓதப்பட்டால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள் என்று அவர்கள் சொல்வதே தவிர அவர்களின் ஆதாரம் வேறு ஏதும் இருக்கவில்லை.