وَاِذَا قِيْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَيْبَ فِيْهَا قُلْتُمْ مَّا نَدْرِيْ مَا السَّاعَةُۙ اِنْ نَّظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَيْقِنِيْنَ ( الجاثية: ٣٢ )
Wa izaa qeela inna wa'dallaahi haqqunw was Saa'atu laa raiba feehaa qultum maa nadree mas Saa'atu in nazunnu illaa zannanw wa maa nahnu bimustaiqineen (al-Jāthiyah 45:32)
Abdul Hameed Baqavi:
அன்றி, "நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. மறுமை வருவதில் யாதொரு சந்தேகமுமில்லை" என்று (உங்களுக்குக்) கூறப்பட்டால் அதற்கு, "மறுமை இன்னதென்றே நாங்கள் அறியோம். அது (வீணான) வெறும் எண்ணத்தைத் தவிர வேறில்லை என்றே எண்ணுகிறோம். அதனை (மெய்யென்று) நாங்கள் நம்பவுமில்லை" என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?) என்று (அவர்களிடம்) கேட்கப்படும்.
English Sahih:
And when it was said, 'Indeed, the promise of Allah is truth and the Hour [is coming] – no doubt about it,' you said, 'We know not what is the Hour. We assume only assumption, and we are not convinced.'" ([45] Al-Jathiyah : 32)
1 Jan Trust Foundation
மேலும் “நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை” என்று கூறப்பட்ட போது; “(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்” என்று நீங்கள் கூறினீர்கள்.