Skip to main content

ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௧௭

وَالَّذِيْ قَالَ لِوَالِدَيْهِ اُفٍّ لَّكُمَآ اَتَعِدَانِنِيْٓ اَنْ اُخْرَجَ وَقَدْ خَلَتِ الْقُرُوْنُ مِنْ قَبْلِيْۚ وَهُمَا يَسْتَغِيْثٰنِ اللّٰهَ وَيْلَكَ اٰمِنْ ۖاِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّۚ فَيَقُوْلُ مَا هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ   ( الأحقاف: ١٧ )

But the one who says
وَٱلَّذِى قَالَ
எவர்/கூறினார்
to his parents
لِوَٰلِدَيْهِ
தனது பெற்றோரை நோக்கி
"Uff
أُفٍّ
“சீ”
to both of you!
لَّكُمَآ
உங்கள் இருவருக்கும்
Do you promise me
أَتَعِدَانِنِىٓ
என்னை எச்சரிக்கிறீர்களா?
that I will be brought forth
أَنْ أُخْرَجَ
நான் வெளியேற்றப்படுவேன்
and have already passed away
وَقَدْ
திட்டமாக
and have already passed away
خَلَتِ
சென்றுள்ளனர்
the generations
ٱلْقُرُونُ
பல தலைமுறைகள்
before me?" before me?"
مِن قَبْلِى
எனக்கு முன்னர்
And they both
وَهُمَا
அவ்விருவரும்
seek help
يَسْتَغِيثَانِ
உதவி தேடுகின்றனர்
(of) Allah
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
"Woe to you!
وَيْلَكَ
உனக்கு என்ன கேடு!
Believe!
ءَامِنْ
நீ நம்பிக்கை கொள்!
Indeed (the) Promise
إِنَّ وَعْدَ
நிச்சயமாக வாக்கு
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
(is) true"
حَقٌّ
உண்மையானதே!
But he says
فَيَقُولُ
அவன் கூறுகிறான்
"Not (is) this
مَا هَٰذَآ
இது இல்லை
but (the) stories
إِلَّآ أَسَٰطِيرُ
கதைகளே தவிர
(of) the former (people)"
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்

Wallazee qaala liwaali daihi uffil lakumaaa ata'idanineee an ukhraja wa qad khalatil quroonu min qablee wa humaa yastagheesaanil laaha wailaka aamin inna wa'dal laahi haqq, fa yaqoolu maa haazaaa illaaa asaateerul awwaleen (al-ʾAḥq̈āf 46:17)

Abdul Hameed Baqavi:

எவன் தன் தாய் தந்தையை நோக்கி (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய நல்மொழிகளை மறுத்து) "சீச்சீ! உங்களுக்கென்ன நேர்ந்தது! (நான் இறந்தபின்) உயிர்ப்பிக்கப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தார் சென்று விட்டனர். (அவர்களில் ஒருவருமே வராது இருக்க நான் மட்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?) என்று அவன் கூறுகின்றான். அதற்கு அவ்விருவரும் (அவனை) பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனை நோக்கி) "உனக்கென்ன கேடு! நீ அல்லாஹ்வை நம்பு. நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி மெய்யானது" என்று கூறுகின்றார்கள். அதற்கவன், "இவைகளெல்லாம் முன்னுள்ளோரின் கட்டுக் கதையே தவிர வேறில்லை. (இதனை நான் நம்பவே மாட்டேன்)" என்று கூறுகின்றான்.

English Sahih:

But one who says to his parents, "Uff to you; do you promise me that I will be brought forth [from the earth] when generations before me have already passed on [into oblivion]?" while they call to Allah for help [and to their son], "Woe to you! Believe! Indeed, the promise of Allah is truth." But he says, "This is not but legends of the former peoples" – ([46] Al-Ahqaf : 17)

1 Jan Trust Foundation

ஆனால் (சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; “சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்படவில்லையா)!” என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும், (அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) “உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது” என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்கவன் “இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று கூறுகிறான்.