Skip to main content
bismillah

حمٓ
ஹா மீம்

Haa-Meeeem

ஹாமீம்.

Tafseer

تَنزِيلُ
இறக்கப்படுகிறது
ٱلْكِتَٰبِ
இந்த வேதம்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
ٱلْحَكِيمِ
மகா ஞானவான்

Tanzeelul Kitaabi minal laahil-'Azeezil Hakeem

(அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் அருளப்பட்டுள்ளது.

Tafseer

مَا خَلَقْنَا
நாம் படைக்கவில்லை
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
وَٱلْأَرْضَ
பூமியையும்
وَمَا بَيْنَهُمَآ
அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும்
إِلَّا بِٱلْحَقِّ
தவிர/உண்மையான காரணத்திற்கு(ம்)
وَأَجَلٍ مُّسَمًّىۚ
ஒரு குறிப்பிட்ட தவணைக்கும்
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்கள்
عَمَّآ أُنذِرُوا۟
அவர்கள் எச்சரிக்கப்பட்டதை
مُعْرِضُونَ
புறக்கணிக்கின்றார்கள்

Maa khalaqnas samaawaati wal arda wa maa bainahumaaa illaa bilhaqqi wa ajalim musammaa; wallazeena kafaroo 'ammaaa unziroo mu'ridoon

வானங்களையும், பூமியையும், அவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் தக்க காரணமும், (அவைகளுக்குக்) குறிப்பிட்ட தவணையுமின்றி நாம் படைக்கவில்லை. எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள், தங்களுக்குப் பயமுறுத்தி எச்சரிக்கை செய்யப்பட்டதை மறுக்கின்றனர்.

Tafseer

قُلْ
நீர் கூறுவீராக!
أَرَءَيْتُم
அறிவியுங்கள்!
مَّا تَدْعُونَ
நீங்கள் அழைக்கின்றவற்றை குறித்து
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
أَرُونِى
எனக்கு காண்பியுங்கள்
مَاذَا
எதை
خَلَقُوا۟
படைத்தார்கள்
مِنَ ٱلْأَرْضِ
பூமியில்
أَمْ
அல்லது
لَهُمْ
அவர்களுக்கு
شِرْكٌ
பங்கு
فِى ٱلسَّمَٰوَٰتِۖ
வானங்களில்
ٱئْتُونِى بِكِتَٰبٍ
ஒரு வேதத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்
مِّن قَبْلِ
இதற்கு முன்னுள்ள
أَوْ
அல்லது
أَثَٰرَةٍ
மீதமிருப்பதை
مِّنْ عِلْمٍ
கல்வியில்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Qul ara'aytum maa tad'oona min doonil laahi aroonee maazaa khalaqoo minal ardi am lahum shirkun fis samaawaati eetoonee bi kitaabim min qabli haazaaa aw asaaratim min 'ilmin in kuntum saadiqeen

ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென) எவைகளை அழைக்கிறீர்களோ அவைகளைப் பற்றி நீங்கள் கவனித்தீர்களா? அவைகள் பூமியில் எதைத்தான் படைத்திருக்கின்றன? அதனை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களில் (அவற்றின் ஆட்சியிலோ அல்லது அவற்றை படைத்ததிலோ) அவைகளுக்குப் பங்குண்டா? நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள யாதொரு வேதத்தை, அல்லது (இது சம்பந்தமான) ஞானமுடையவர்களின் யாதொரு வாக்கியத்தைக் கொண்டு வாருங்கள்.

Tafseer

وَمَنْ
யார்?
أَضَلُّ
மிகப் பெரிய வழிகேடர்கள்
مِمَّن يَدْعُوا۟
அழைக்கின்ற வர்களை விட
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
مَن لَّا
பதில் அளிக்க மாட்டார்கள்
لَهُۥٓ
அவர்களுக்கு
إِلَىٰ يَوْمِ
மறுமை நாள் வரை
وَهُمْ
அவர்கள்
عَن دُعَآئِهِمْ
அவர்களின்துஆவை
غَٰفِلُونَ
அறியமாட்டார்கள்

Wa man adallu mimmany yad'oo min doonil laahi mallaa yastajeebu lahooo ilaa Yawmil Qiyaamati wa hum'an du'aaa'ihim ghaafiloon

மறுமை நாள் வரையில் (அழைத்தபோதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையுமே அவை அறியாது.

Tafseer

وَإِذَا حُشِرَ
எழுப்பப்படும் போது
ٱلنَّاسُ
மக்கள்
كَانُوا۟
ஆகிவிடுவார்கள்
لَهُمْ
அவர்களுக்கு
أَعْدَآءً
எதிரிகளாக
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிடுவார்கள்
بِعِبَادَتِهِمْ
அவர்கள் தங்களை வணங்கியதை
كَٰفِرِينَ
மறுப்பவர்களாக

Wa izaa hushiran naasu kaanoo lahum a'daaa'anw wa kaanoo bi'ibaadatihim kaafireen

தவிர, மனிதர்களை (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் சமயத்தில், அவை இவர்களுக்கு எதிரிகளாகி, இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் (அவைகள்) நிராகரித்துவிடும்.

Tafseer

وَإِذَا تُتْلَىٰ
ஓதிக் காண்பிக்கப்பட்டால்
عَلَيْهِمْ
இவர்கள் மீது
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
بَيِّنَٰتٍ
தெளிவான அத்தாட்சிகளாக
قَالَ
கூறினார்கள்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
لِلْحَقِّ
சத்தியத்தைப் பார்த்து
لَمَّا
அது வந்த போது
جَآءَهُمْ
அவர்களிடம்
هَٰذَا
இது
سِحْرٌ
சூனியமாகும்
مُّبِينٌ
தெளிவான

Wa izaa tutlaa 'alaihim Aayaatunaa baiyinaatin qaalal lazeena kafaroo lilhaqqi lammaa jaaa'ahum haazaa sihrum mubeen

நம்முடைய தெளிவான வசனங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், தங்களிடம் வந்த அந்தச் சத்திய வசனங்களை நிராகரித்துவிட்டு, அவைகளைத் தெளிவான சூனியமென்றும் கூறுகின்றனர்.

Tafseer

أَمْ يَقُولُونَ
கூறுகிறார்களா?
ٱفْتَرَىٰهُۖ
இவர் இதை இட்டுக்கட்டினார்
قُلْ
கூறுவீராக!
إِنِ ٱفْتَرَيْتُهُۥ
நான் இதை இட்டுக்கட்டி இருந்தால்
فَلَا تَمْلِكُونَ
நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள்
لِى
எனக்காக
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
شَيْـًٔاۖ
எதையும்
هُوَ
அவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا تُفِيضُونَ
எதை/நீங்கள் ஈடுபடுகிறீர்களோ
فِيهِۖ
அதில்
كَفَىٰ
போதுமானவன்
بِهِۦ
அவனே
شَهِيدًۢا
சாட்சியால்
بَيْنِى
எனக்கு மத்தியிலும்
وَبَيْنَكُمْۖ
உங்களுக்கு மத்தியிலும்
وَهُوَ
அவன்தான்
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்

Am yaqooloonaf taraahu qul inif taraituhoo falaa tamlikoona lee minal laahi shai'an Huwa a'lamu bimaa tufeedoona feehi kafaa bihee shaheedam bainee wa bainakum wa Huwal Ghafoorur Raheem

(நபியே!) இதனை நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீர்கள் என்று இவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இதனை நான் பொய்யாகக் கற்பனை செய்துகொண்டால் (அதற்காக) அல்லாஹ் (என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில் அல்லாஹ்)வுக்கு எதிரிடையாக நீங்கள் எனக்கு யாதொன்றும் (உதவி) செய்ய சக்தியற்றவர்கள் (தானே!) இதைப் பற்றி (எனக்கு விரோதமாக) நீங்கள் என்னென்ன கூறுகின்றீர்களோ, அவைகளை அவன் நன்கறிந்துமிருக்கின்றான். ஆகவே, எனக்கும் உங்களுக்கும் மத்தியில் அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான். அவன் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
مَا كُنتُ
நான் இருக்கவில்லை
بِدْعًا
புதுமையானவனாக
مِّنَ ٱلرُّسُلِ
தூதர்களில்
وَمَآ أَدْرِى
அறியமாட்டேன்
مَا يُفْعَلُ
என்ன செய்யப்படும்
بِى
எனக்கு
وَلَا بِكُمْۖ
இன்னும் உங்களுக்கு
إِنْ أَتَّبِعُ
பின்பற்ற மாட்டேன்
إِلَّا
தவிர
مَا يُوحَىٰٓ
எது/வஹீ அறிவிக்கப்படுகின்றது
إِلَىَّ
எனக்கு
وَمَآ أَنَا۠
நான் இல்லை/தவிர
نَذِيرٌ
எச்சரிப்பாளராகவே
مُّبِينٌ
தெளிவான

Qul maa kuntu bid'am minal Rusuli wa maaa adreee ma yuf'alu bee wa laa bikum in attabi'u illaa maa yoohaaa ilaiya ya maaa ana illaa nazeerum mubeen

(நபியே! அவர்களை நோக்கி, பின்னும்) நீங்கள் கூறுங்கள்: (இறைவன் அனுப்பிய) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்ல. (எனக்கு முன்னர் தூதர்கள் பலர் வந்தே இருக்கின்றனர்.) அன்றி, என்னைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹீ மூலமாக அறிவிக்கப்பட்டவைகளை தவிர, (மற்ற எதையும்) நான் பின்பற்றுபவன் அல்ல. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை.

Tafseer

قُلْ
கூறுவீராக!
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
إِن كَانَ
இது இருந்தால்
مِنْ عِندِ
அல்லாஹ்விடமிருந்து
وَكَفَرْتُم بِهِۦ
இன்னும் நீங்கள் நிராகரித்து விட்டால்/இதை
وَشَهِدَ
இன்னும் சாட்சியும் கூறினார்
شَاهِدٌ
ஒரு சாட்சியாளர்
مِّنۢ بَنِىٓ
இஸ்ரவேலர்களில் உள்ள
عَلَىٰ مِثْلِهِۦ
இதுபோன்ற ஒன்றுக்கு
فَـَٔامَنَ
அவர் நம்பிக்கை கொண்டிருக்க
وَٱسْتَكْبَرْتُمْۖ
நீங்களோ பெருமை அடித்தீர்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி காட்ட மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களுக்கு
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார(ர்கள்)

Qul ara'aytum in kaana min 'indil laahi wa kafartum bihee wa shahida shaahidum mim Banee Israaa'eela 'alaa mislihee fa aamana wastak bartum innal laaha laa yahdil qawmaz zaalimeen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதனை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப்போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கின்றது என்று சாட்சியம் கூறி, அதனை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதனை நிராகரித்து) விட்டால், (உங்களுடைய கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்."

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் அஹ்காஃப்
القرآن الكريم:الأحقاف
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Ahqaf
ஸூரா:46
வசனம்:35
Total Words:44
Total Characters:2595
Number of Rukūʿs:4
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:66
Starting from verse:4510