Skip to main content

يَٰقَوْمَنَآ
எங்கள் சமுதாயமே!
أَجِيبُوا۟
பதில் தாருங்கள்!
دَاعِىَ
அழைப்பாளருக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَءَامِنُوا۟
இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள்
بِهِۦ
அவரை
يَغْفِرْ
அவன் மன்னிப்பான்
لَكُم
உங்களுக்கு
مِّن ذُنُوبِكُمْ
உங்கள் பாவங்களை
وَيُجِرْكُم
இன்னும் உங்களை பாதுகாப்பான்
مِّنْ عَذَابٍ
தண்டனையிலிருந்து
أَلِيمٍ
வலி தரக்கூடிய(து)

Yaa qawmanaaa ajeeboo daa'iyal laahi wa aaminoo bihee yaghfir lakum min zunoobikum wa yujirkum min 'azaabin aleem

எங்களுடைய இனத்தார்களே! அல்லாஹ்வின் அளவில் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுடைய பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்.

Tafseer

وَمَن
எவர்
لَّا يُجِبْ
பதில் தரவில்லையோ
دَاعِىَ
அழைப்பாளருக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَلَيْسَ بِمُعْجِزٍ
அவர் தப்பித்துவிட மாட்டார்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَيْسَ
இல்லை
لَهُۥ
அவருக்கு
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
أَوْلِيَآءُۚ
பாதுகாவலர்கள்
أُو۟لَٰٓئِكَ
இப்படிப்பட்டவர்கள்
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில் இருக்கின்றனர்
مُّبِينٍ
மிகத் தெளிவான

Wa mal laa yujib daa'iyal laahi falaisa bimu'jizin fil ardi wa laisa lahoo min dooniheee awliyaaa'; ulaaa ika fee dalaalim mubeen

எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடிய போதிலும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை யன்றி, அவனுக்கு பாதுகாப்பவர் ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இத்தகையவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருப்பர்" என்றார்கள்.

Tafseer

أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் கவனிக்கவில்லையா?
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ٱلَّذِى خَلَقَ
படைத்தவன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
وَٱلْأَرْضَ
பூமியையும்
وَلَمْ يَعْىَ
கலைத்து விடாதவனுமாகிய
بِخَلْقِهِنَّ
அவற்றைபடைத்ததால்
بِقَٰدِرٍ
ஆற்றலுடையவன் (என்பதை)
عَلَىٰٓ أَن
உயிர்ப்பிப்பதற்கு
يُحْۦِىَ
இறந்தவர்களை
ٱلْمَوْتَىٰۚ
ஏன் இல்லை
بَلَىٰٓ
நிச்சயமாக அவன்
إِنَّهُۥ عَلَىٰ
எல்லாவற்றின் மீதும்
كُلِّ شَىْءٍ
பேராற்றலுடையவன்
قَدِيرٌ
Err

Awalam yaraw annal laahal lazee khalaqas samaawaati wal larda wa lam ya'ya bikhal qihinna biqaadirin 'alaaa anyyuhiyal mawtaa; balaaa innahoo 'alaa kulli shai'in Qadeer

வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன்.

Tafseer

وَيَوْمَ
நாளில்
يُعْرَضُ
கொண்டுவரப்படும்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
عَلَى ٱلنَّارِ
நரகத்தின் முன்
أَلَيْسَ
இல்லையா?
هَٰذَا
இது
بِٱلْحَقِّۖ
உண்மையாக
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
بَلَىٰ
ஏன் இல்லை?
وَرَبِّنَاۚ
எங்கள் இறைவன் மீது சத்தியமாக
قَالَ
கூறுவான்
فَذُوقُوا۟
நீங்கள் சுவையுங்கள்!
ٱلْعَذَابَ
இந்த வேதனையை
بِمَا كُنتُمْ
நீங்கள் இருந்த காரணத்தால்
تَكْفُرُونَ
நிராகரிப்பவர்களாக

Wa Yawma yu'radul lazeena kafaroo 'alan naari alaisa haaza bil haqq; qaaloo balaa wa Rabbinaa; qaala fazooqul 'azaaba bimaa kuntum takfuroon

நிராகரிப்பவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படும் நாளில் (அவர்களை நோக்கி,) "இது உண்மையல்லவா? (என்று கேட்கப்படும்.) அதற்கு அவர்கள் "எங்கள் இறைவன் மீது சத்தியமாக! உண்மைதான்" என்று கூறுவார்கள். (அதற்கவர்களை நோக்கி) "நீங்கள் இதனை நிராகரித்ததன் காரணமாக இதன் வேதனையை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருங்கள்" என்று கூறுவான்.

Tafseer

فَٱصْبِرْ
பொறுமை காப்பீராக!
كَمَا صَبَرَ
பொறுத்தது போன்று
أُو۟لُوا۟ ٱلْعَزْمِ
மிகவும் வீரமிக்கவர்கள்
مِنَ ٱلرُّسُلِ
தூதர்களில்
وَلَا تَسْتَعْجِل
அவர்களுக்காக அவசரமாகக் கேட்காதீர்!
كَأَنَّهُمْ
அவர்களுக்குத் தோன்றும்
يَوْمَ
நாளில்
يَرَوْنَ
அவர்கள் பார்க்கின்ற(னர்)
مَا يُوعَدُونَ
அவர்கள் எச்சரிக்கப்பட்டதை
لَمْ يَلْبَثُوٓا۟
அவர்கள் தங்கவில்லை
إِلَّا سَاعَةً
சில மணிநேரம் தவிர
مِّن نَّهَارٍۭۚ
பகலின்
بَلَٰغٌۚ
இது எடுத்து சொல்லப்படும் செய்தியாகும்
فَهَلْ يُهْلَكُ
அழிக்கப்படுவார்களா?
إِلَّا ٱلْقَوْمُ
மக்களைத் தவிர
ٱلْفَٰسِقُونَ
பாவிகளான

Fasbir kamaa sabara ulul 'azmi minar Rusuli wa laa tasta'jil lahum; ka annahum Yawma yarawna maa yoo'adoona lam yalbasooo illaa saa'atam min nahaar; balaagh; fahal yuhlaku illal qawmul faasiqoon

(நபியே!) நம்முடைய தூதர்களிலுள்ள வீரர்கள் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீங்களும் சகித்துக் கொண்டு பொறுமையாக இருங்கள். அவர்களுக்கு (வேதனையை) நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டதை அவர்கள் காணும் நாளில் (இப்புவியில்) ஒரு பகலில் ஒரு நாழிகையே தவிர (அதிகமாக)த் தங்கியிருக்கவில்லை என்று அவர்கள் எண்ணுவார்கள். (இதனை) அவர்களுக்கு (நீங்கள்) அறிவிக்க வேண்டும். ஆகவே, பாவம் செய்த மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா? (இல்லவே இல்லை.)

Tafseer