இத்தகையவர்களின் கதியோ, இவர்களுக்கு முன் சென்றுபோன (பாவிகளான) மனித, ஜின்களிலுள்ள கூட்டத்தார் களைப் போல் (இவர்களும் அழிந்து) இவர்களின் மீதும் (அல்லாஹ் வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) வாக்குறுதி உண்மையாகிவிட்டது. நிச்சயமாக இத்தகையவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.
English Sahih:
Those are the ones upon whom the word [i.e., decree] has come into effect, [who will be] among nations which had passed on before them of jinn and men. Indeed, they [all] were losers. ([46] Al-Ahqaf : 18)
1 Jan Trust Foundation
இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின், மற்றும் மனித சமுதாயங்களுடன் இவர்கள் மீதும் (அல்லாஹ்வுடைய தண்டனையின்) வாக்கு உறுதியாகிவிட்டது. “நிச்சயமாக இவர்கள் (-நிராகரிப்பாளர்களான முன்னோரும் பின்னோரும்) நஷ்டவாளிகளாகவே இருகின்றனர்.”