Skip to main content

ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௭

وَاعْلَمُوْٓا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِ ۗ لَوْ يُطِيْعُكُمْ فِيْ كَثِيْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَلٰكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَيْكُمُ الْاِيْمَانَ وَزَيَّنَهٗ فِيْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَ ۗ اُولٰۤىِٕكَ هُمُ الرَّاشِدُوْنَۙ  ( الحجرات: ٧ )

And know
وَٱعْلَمُوٓا۟
அறிந்துகொள்ளுங்கள்!
that
أَنَّ
நிச்சயமாக
among you
فِيكُمْ
உங்களுக்கு மத்தியில்
(is the) Messenger of Allah (is the) Messenger of Allah
رَسُولَ ٱللَّهِۚ
அல்லாஹ்வின் தூதர்
If he were to obey you
لَوْ يُطِيعُكُمْ
அவர் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால்
in much
فِى كَثِيرٍ
அதிகமானவற்றில்
of the matter
مِّنَ ٱلْأَمْرِ
காரியங்களில்
surely you would be in difficulty
لَعَنِتُّمْ
நீங்கள் சிரமப்பட்டுவிடுவீர்கள்
but
وَلَٰكِنَّ
என்றாலும்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
has endeared
حَبَّبَ
விருப்பமாக்கினான்
to you the Faith
إِلَيْكُمُ ٱلْإِيمَٰنَ
உங்களுக்கு ஈமானை
and has made it pleasing
وَزَيَّنَهُۥ
இன்னும் அதை அலங்கரித்தான்
in your hearts
فِى قُلُوبِكُمْ
உங்கள் உள்ளங்களில்
and has made hateful
وَكَرَّهَ
இன்னும் வெறுப்பாக்கினான்
to you
إِلَيْكُمُ
உங்களிடம்
disbelief
ٱلْكُفْرَ
இறை நிராகரிப்பை(யும்)
and defiance
وَٱلْفُسُوقَ
பாவத்தையும்
and disobedience
وَٱلْعِصْيَانَۚ
மாறுசெய்வதையும்
Those (are) they
أُو۟لَٰٓئِكَ هُمُ
இத்தகையவர்கள்தான்
the guided ones
ٱلرَّٰشِدُونَ
சத்தியவழி நடப்பவர்கள்

Wa'lamooo anna feekum Rasoolal laah; law yutee'ukum fee kaseerim minal amrila'anittum wa laakinnal laaha habbaba ilaikumul eemaana wa zaiyanahoo fee quloobikum wa karraha ilaikumul kufra walfusooqa wal'isyaan; ulaaaika humur raashidoon (al-Ḥujurāt 49:7)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கின்றார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு கட்டுப்படுவதென்றால், நிச்சயமாக நீங்கள்தாம் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ஆயினும், அல்லாஹ் நம்பிக்கையின் மீதே உங்களுக்கு அன்பைக் கொடுத்து, உங்கள் உள்ளங்களிலும் அதனையே அழகாக்கியும் வைத்தான். அன்றி, நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கிவைத்தான். இத்தகையவர்கள்தான் நேரான வழியில் இருக்கின்றனர்.

English Sahih:

And know that among you is the Messenger of Allah. If he were to obey you in much of the matter, you would be in difficulty, but Allah has endeared to you the faith and has made it pleasing in your hearts and has made hateful to you disbelief, defiance and disobedience. Those are the [rightly] guided. ([49] Al-Hujurat : 7)

1 Jan Trust Foundation

அறிந்துகொள்ளுங்கள்| நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.