Skip to main content
bismillah

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
لَا تُقَدِّمُوا۟
நீங்கள் முந்தாதீர்கள்
بَيْنَ يَدَىِ
முன்பாக
ٱللَّهِ
அல்லாஹ்விற்கு(ம்)
وَرَسُولِهِۦۖ
அவனது தூதருக்கும்
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Yaa ayyuhal lazeena aamanoo la tuqaddimoo baina yada yil laahi wa Rasoolihee wattaqul laah; innal laaha samee'un 'Aleem

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
لَا تَرْفَعُوٓا۟
உயர்த்தாதீர்கள்!
أَصْوَٰتَكُمْ
உங்கள் சப்தங்களை
فَوْقَ
மேல்
صَوْتِ
சப்தத்திற்கு
ٱلنَّبِىِّ
நபியின்
وَلَا تَجْهَرُوا۟
இன்னும் உரக்கப் பேசாதீர்கள்!
لَهُۥ
அவருக்கு முன்
بِٱلْقَوْلِ
பேசுவதில்
كَجَهْرِ
உரக்கப் பேசுவதைப் போல்
بَعْضِكُمْ
உங்களில் சிலர்
لِبَعْضٍ
சிலருக்கு முன்
أَن تَحْبَطَ
பாழாகிவிடாமல் இருப்பதற்காக
أَعْمَٰلُكُمْ
உங்கள் அமல்கள்
وَأَنتُمْ لَا
நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்

Yaa ayyuhal lazeena aamanoo laa tarfa'ooo aswaatakum fawqa sawtin Nabiyi wa laa tajharoo lahoo bilqawli kajahri ba'dikum liba 'din an tahbata a 'maalukum wa antum laa tash'uroon

நம்பிக்கையாளர்களே! (நபி பேசும்பொழுது) நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள். அன்றி, உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் கூச்சலிட்டுச் சப்தமாகப் பேசுவதைப் போல், அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் கூச்சல் இட்டுப் பேசாதீர்கள். இதன் காரணமாக உங்களுடைய நன்மைகள் எல்லாம் அழிந்துவிடக்கூடும். (இதனை) நீங்கள் உணர்ந்துகொள்ள முடியாது.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ يَغُضُّونَ
தாழ்த்திக் கொள்பவர்கள்
أَصْوَٰتَهُمْ
தங்கள் சப்தங்களை
عِندَ
அருகில்
رَسُولِ
தூதருக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
அவர்களைத்தான்
ٱمْتَحَنَ
சோதித்து தேர்வு செய்துள்ளான்
ٱللَّهُ
அல்லாஹ்
قُلُوبَهُمْ
அவர்களுடைய உள்ளங்களை
لِلتَّقْوَىٰۚ
இறையச்சத்திற்காக
لَهُم
அவர்களுக்கு உண்டு
مَّغْفِرَةٌ
மன்னிப்பு(ம்)
وَأَجْرٌ عَظِيمٌ
மகத்தான கூலியும்

Innal lazeena yaghud doona aswaatahum 'inda Rasoolil laahi ulaaa'ikal lazeenam tah anal laahu quloobahum littaqwaa; lahum maghfiratunw waajrun 'azeem

எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பாக (மரியாதைக்காகத்) தங்களுடைய சப்தத்தைத் தாழ்த்திக் கொள்கின்றார்களோ, அவர்களுடைய உள்ளங்களை நிச்சயமாக அல்லாஹ் சோதனை செய்து பரிசுத்தத்தன்மைக்கு எடுத்துக் கொண்டான். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; மகத்தான கூலியும் உண்டு.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ يُنَادُونَكَ
உம்மை சப்தமிட்டு அழைப்பவர்கள்
مِن وَرَآءِ
பின்னால் இருந்து
ٱلْحُجُرَٰتِ
அறைகளுக்கு
أَكْثَرُهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
لَا يَعْقِلُونَ
அறியமாட்டார்கள்

Innal lazeena yunaadoo naka minw waraaa'il hujuraati aksaruhum laa ya'qiloon

(நபியே!) எவர்கள் (நீங்கள் வசித்திருக்கும்) அறைக்கு முன்பாக நின்று கொண்டு உங்களை(க் கூச்சலிட்டு)ச் சப்தமிட்டு அழைக்கின்றார்களோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்களே!

Tafseer

وَلَوْ أَنَّهُمْ
அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால்
حَتَّىٰ تَخْرُجَ
வரை/நீர் வெளியேறி வருகின்ற
إِلَيْهِمْ
அவர்களிடம்
لَكَانَ
அது இருந்திருக்கும்
خَيْرًا
நன்றாக
لَّهُمْۚ
அவர்களுக்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Wa law annahum sabaroo hatta takhruja ilaihim lakaana khairal lahum; wallaahu Ghafoorur Raheem

(உங்களது அறையிலிருந்து) நீங்கள் வெளிப்பட்டு அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் பொறுத்திருந்தால், அது அவர்களுக்கு எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
إِن جَآءَكُمْ
உங்களிடம் வந்தால்
فَاسِقٌۢ
பாவியான ஒருவர்
بِنَبَإٍ
ஒரு செய்தியைக் கொண்டு
فَتَبَيَّنُوٓا۟
நன்கு தெளிவு பெறுங்கள்!
أَن تُصِيبُوا۟
நீங்கள்சேதமேற்படுத்தி விடாமல் இருப்பதற்காக
قَوْمًۢا
ஒரு கூட்டத்திற்கு
بِجَهَٰلَةٍ
அறியாமல்
فَتُصْبِحُوا۟
ஆகிவிடுவீர்கள்
عَلَىٰ مَا
நீங்கள் செய்ததற்காக
نَٰدِمِينَ
வருந்தியவர்களாக

Yaaa ayyuhal lazeena aamanoo in jaaa'akum faasqum binaba in fatabaiyanooo an tuseeboo qawmam bijahalatin fatusbihoo 'alaa maa fa'altum naadimeen

நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டுப் பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும்.

Tafseer

وَٱعْلَمُوٓا۟
அறிந்துகொள்ளுங்கள்!
أَنَّ
நிச்சயமாக
فِيكُمْ
உங்களுக்கு மத்தியில்
رَسُولَ ٱللَّهِۚ
அல்லாஹ்வின் தூதர்
لَوْ يُطِيعُكُمْ
அவர் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால்
فِى كَثِيرٍ
அதிகமானவற்றில்
مِّنَ ٱلْأَمْرِ
காரியங்களில்
لَعَنِتُّمْ
நீங்கள் சிரமப்பட்டுவிடுவீர்கள்
وَلَٰكِنَّ
என்றாலும்
ٱللَّهَ
அல்லாஹ்
حَبَّبَ
விருப்பமாக்கினான்
إِلَيْكُمُ ٱلْإِيمَٰنَ
உங்களுக்கு ஈமானை
وَزَيَّنَهُۥ
இன்னும் அதை அலங்கரித்தான்
فِى قُلُوبِكُمْ
உங்கள் உள்ளங்களில்
وَكَرَّهَ
இன்னும் வெறுப்பாக்கினான்
إِلَيْكُمُ
உங்களிடம்
ٱلْكُفْرَ
இறை நிராகரிப்பை(யும்)
وَٱلْفُسُوقَ
பாவத்தையும்
وَٱلْعِصْيَانَۚ
மாறுசெய்வதையும்
أُو۟لَٰٓئِكَ هُمُ
இத்தகையவர்கள்தான்
ٱلرَّٰشِدُونَ
சத்தியவழி நடப்பவர்கள்

Wa'lamooo anna feekum Rasoolal laah; law yutee'ukum fee kaseerim minal amrila'anittum wa laakinnal laaha habbaba ilaikumul eemaana wa zaiyanahoo fee quloobikum wa karraha ilaikumul kufra walfusooqa wal'isyaan; ulaaaika humur raashidoon

(நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கின்றார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு கட்டுப்படுவதென்றால், நிச்சயமாக நீங்கள்தாம் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ஆயினும், அல்லாஹ் நம்பிக்கையின் மீதே உங்களுக்கு அன்பைக் கொடுத்து, உங்கள் உள்ளங்களிலும் அதனையே அழகாக்கியும் வைத்தான். அன்றி, நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கிவைத்தான். இத்தகையவர்கள்தான் நேரான வழியில் இருக்கின்றனர்.

Tafseer

فَضْلًا
அருளாக(வும்)
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
وَنِعْمَةًۚ
கிருபையாகவும்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Fadlam minal laahi wa ni'mah; wallaahu 'Aleemun Hakeem

(மிகச் சிறந்த இத்தன்மைகளை அடைவது) அல்லாஹ்வுடைய அருளும், (அவனுடைய) கிருபையுமாகும். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَإِن طَآئِفَتَانِ
இரு பிரிவினர்
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
ٱقْتَتَلُوا۟
தங்களுக்குள் சண்டையிட்டால்
فَأَصْلِحُوا۟
சமாதானம் செய்யுங்கள்!
بَيْنَهُمَاۖ
அவ்விருவருக்கும் மத்தியில்
فَإِنۢ بَغَتْ
எல்லை மீறினால்
إِحْدَىٰهُمَا
அவ்விருவரில் ஒரு பிரிவினர்
عَلَى ٱلْأُخْرَىٰ
மற்றொரு பிரிவினர்மீது
فَقَٰتِلُوا۟
சண்டை செய்யுங்கள்
ٱلَّتِى تَبْغِى
எல்லை மீறுகின்றவர்களிடம்
حَتَّىٰ تَفِىٓءَ
அவர்கள் திரும்புகின்றவரை
إِلَىٰٓ أَمْرِ
கட்டளையின் பக்கம்
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
فَإِن فَآءَتْ
அவர்கள் திரும்பிவிட்டால்
فَأَصْلِحُوا۟
சமாதானம் செய்யுங்கள்!
بَيْنَهُمَا
அவ்விருவருக்கும் மத்தியில்
بِٱلْعَدْلِ
நீதமாக
وَأَقْسِطُوٓا۟ۖ
இன்னும் நேர்மையாக இருங்கள்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கின்றான்
ٱلْمُقْسِطِينَ
நேர்மையாளர்களை

Wa in taaa'ifataani minal mu'mineenaq tataloo faaslihoo bainahumaa fa-im baghat ih daahumaa 'alal ukhraa faqaatilul latee tabhee hattaa tafeee'a ilaaa amril laah; fa-in faaa't fa aslihoo bainahumaa bil'adli wa aqsitoo innal laaha yuhibbul muqsiteen

நம்பிக்கையாளார்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்துகொண்டால், அவர்களை சமாதானப்படுத்தி விடுங்கள். அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது வரம்பு மீறி அநியாயம் செய்தால், அநியாயம் செய்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விரு வகுப்பார்களுக்கிடையே சமாதானம் செய்து, நீதமாகத் தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கின்றான்.

Tafseer

إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம்
إِخْوَةٌ
சகோதரர்கள் ஆவர்
فَأَصْلِحُوا۟
ஆகவே சமாதானம் செய்யுங்கள்!
بَيْنَ
மத்தியில்
أَخَوَيْكُمْۚ
உங்கள் இரு சகோதரர்களுக்கு
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்

Innamal mu'minoona ikhwatun fa aslihoo baina akhawaykum wattaqul laaha la'allakum tuhamoon

நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தையும்) நிலைநிறுத்துங்கள். (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஹுஜுராத்
القرآن الكريم:الحجرات
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Hujurat
ஸூரா:49
வசனம்:18
Total Words:343
Total Characters:1476
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:106
Starting from verse:4612