Skip to main content

ஸூரத்துத் தூர் வசனம் ௨௧

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَيْءٍۚ كُلُّ امْرِئٍ ۢبِمَا كَسَبَ رَهِيْنٌ   ( الطور: ٢١ )

And those who
وَٱلَّذِينَ
எவர்கள்
believed
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்களோ
and followed them
وَٱتَّبَعَتْهُمْ
இன்னும் அவர்களைப் பின்பற்றினார்களோ
their offspring
ذُرِّيَّتُهُم
அவர்களின் சந்ததிகளும்
in faith
بِإِيمَٰنٍ
இறை நம்பிக்கையில்
We will join with them
أَلْحَقْنَا بِهِمْ
அவர்களுடன் சேர்த்து வைப்போம்
their offspring
ذُرِّيَّتَهُمْ
அவர்களின் சந்ததிகளை
and not We will deprive them
وَمَآ أَلَتْنَٰهُم
அவர்களுக்கு நாம் குறைக்க மாட்டோம்
of their deeds
مِّنْ عَمَلِهِم
அவர்களின் அமல்களில்
(in) any thing
مِّن شَىْءٍۚ
எதையும்
Every person
كُلُّ ٱمْرِئٍۭ
ஒவ்வொரு/மனிதனும்
for what he earned
بِمَا كَسَبَ
தான் செய்த செயலுக்காக
(is) pledged
رَهِينٌ
தடுத்து வைக்கப்பட்டிருப்பான்

Wallazeena aamanoo wattaba'at hum zurriyyatuhum bieemaanin alhaqnaa bihim zurriyyatahum wa maaa alatnaahum min 'amalihim min shai'; kullum ri'im bimaa kasaba raheen (aṭ-Ṭūr 52:21)

Abdul Hameed Baqavi:

எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கின்றார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சுவனபதியில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் ஒன்றையுமே நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயலுக்குப் பிணையாக இருக்கின்றான்.

English Sahih:

And those who believed and whose descendants followed them in faith – We will join with them their descendants, and We will not deprive them of anything of their deeds. Every person, for what he earned, is retained. ([52] At-Tur : 21)

1 Jan Trust Foundation

எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.