உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக கிருபையுடையவனும் மிக இரக்கம் உடையவனாகவும் இருக்கின்றான்.
English Sahih:
It is He who sends down upon His Servant [Muhammad (^)] verses of clear evidence that He may bring you out from darknesses into the light. And indeed, Allah is to you Kind and Merciful. ([57] Al-Hadid : 9)
1 Jan Trust Foundation
அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன்; நிகரற்ற அன்புடையவன்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் தனது அடியார் மீது தெளிவான அத்தாட்சிகளை இறக்குகின்றான் அவன் உங்களை இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் வெளியேற்றுவதற்காக. நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் கருணையாளனும் ஆவான்.