(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பெரிய) கால்நடைகளில், சுமை சுமக்கக் கூடியவற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கின்றான். ஆகவே) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக் கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.
English Sahih:
And of the grazing livestock are carriers [of burdens] and those [too] small. Eat of what Allah has provided for you and do not follow the footsteps of Satan. Indeed, he is to you a clear enemy. ([6] Al-An'am : 142)
1 Jan Trust Foundation
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் கால்நடைகளில், சுமக்கத் தகுதியானதையும் சுமக்கத் தகுதியற்றதையும் (உற்பத்தி செய்தவன் அவன்தான்). அல்லாஹ் உங்களுக்கு உணவளித்தவற்றில் இருந்து புசியுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான்.