அவர்களை நோக்கி, "வாருங்கள்; அல்லாஹ்வுடைய தூதர் உங்களுடைய குற்றங்களை மன்னிக்க, (இறைவனிடம்) கோருவார்" என்று கூறப்பட்டால், அவர்கள் தங்கள் தலைகளை அசைத்துக் கர்வம் கொண்டு (உங்களைப் பார்க்காதவர்களைப் போல்) திரும்பிச் செல்வதை நீங்கள் காண்பீர்கள்.
English Sahih:
And when it is said to them, "Come, the Messenger of Allah will ask forgiveness for you," they turn their heads aside and you see them evading while they are arrogant. ([63] Al-Munafiqun : 5)
1 Jan Trust Foundation
இன்னும், “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(உங்கள் செயல்களுக்காக வருந்தி, திருந்தி) வாருங்கள், அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (அல்லாஹ்விடம் பாவ)மன்னிப்புத் தேடுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால் தங்கள் தலைகளை (இங்கும் அங்கும்) வேகமாக அசைக்கிறார்கள். இன்னும், (உம்மை விட்டும்) புறக்கணிப்பவர்களாகவே அவர்களை நீர் பார்ப்பீர். அவர்கள் கர்வம் கொள்பவர்கள் ஆவார்கள்.