Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௨

فَدَلّٰىهُمَا بِغُرُورٍۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِۗ وَنَادٰىهُمَا رَبُّهُمَآ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّكُمَآ اِنَّ الشَّيْطٰنَ لَكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ   ( الأعراف: ٢٢ )

So he made both of them fall
فَدَلَّىٰهُمَا
ஆக, தரம் தாழ்த்தினான்/அவ்விருவரை
by deception
بِغُرُورٍۚ
ஏமாற்றி
Then when they both tasted
فَلَمَّا ذَاقَا
இருவரும் சுவைத்தபோது
the tree became apparent
ٱلشَّجَرَةَ بَدَتْ
மரத்தை/தெரிந்தன
to both of them
لَهُمَا
அவ்விருவருக்கு
their shame
سَوْءَٰتُهُمَا
அவ்விருவரின் வெட்கத்தலங்கள்
and they began
وَطَفِقَا
அவ்விருவரும் முயன்றனர்
(to) fasten
يَخْصِفَانِ
அவ்விவரும் மூடிக்கொள்கின்றனர்
over themselves
عَلَيْهِمَا
தம் இருவர் மீதும்
from (the) leaves
مِن وَرَقِ
இலைகளினால்
(of) the Garden
ٱلْجَنَّةِۖ
சொர்க்கத்தின்
And called them both
وَنَادَىٰهُمَا
அழைத்தான்/அவ்விருவரை
their Lord
رَبُّهُمَآ
அவ்விருவரின் இறைவன்
"Did not I forbid you both
أَلَمْ أَنْهَكُمَا
நான் தடுக்கவில்லையா?/உங்களிருவரை
from this [the] tree
عَن تِلْكُمَا ٱلشَّجَرَةِ
அம்மரத்தை விட்டு
and [I] say
وَأَقُل
இன்னும் நான்கூறவில்லையா?
to both of you
لَّكُمَآ
உங்களிருவருக்கு
that
إِنَّ
நிச்சயமாக
[the] Shaitaan
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தான்
to both of you
لَكُمَا
உங்களிருவருக்கு
(is) an enemy?"
عَدُوٌّ
எதிரி
open?"
مُّبِينٌ
வெளிப்படையான

Fadallaahumaa bighuroor; falammaa zaaqash shajarata badat lahumaa saw aatuhumaa wa tafiqaa yakhsifaani 'alaihimaa minw waraqil jannati wa naadaahumaa Rabbuhumaaa alam anhakumaa 'an tilkumash shajarati wa aqul lakumaaa innash Shaitaana lakumaa 'aduwwum mubeen (al-ʾAʿrāf 7:22)

Abdul Hameed Baqavi:

அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் "அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.

English Sahih:

So he made them fall, through deception. And when they tasted of the tree, their private parts became apparent to them, and they began to fasten together over themselves from the leaves of Paradise. And their Lord called to them, "Did I not forbid you from that tree and tell you that Satan is to you a clear enemy?" ([7] Al-A'raf : 22)

1 Jan Trust Foundation

இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு| “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.