உங்கள் உள்ளங்கள் திருப்தியடைவதற்காக ஒரு நற்செய்தியாகவே இதனை அல்லாஹ் (உங்களுக்கு) ஆக்கி வைத்தான். அல்லாஹ்விடம் இருந்தேயன்றி (உங்களுக்கு) இவ்வுதவி கிடைத்து விடவில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
English Sahih:
And Allah made it not but good tidings and so that your hearts would be assured thereby. And victory is not but from Allah. Indeed, Allah is Exalted in Might and Wise. ([8] Al-Anfal : 10)
1 Jan Trust Foundation
உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒரு நற்செய்தியாகவும் உங்கள் உள்ளங்கள் அதன் மூலம் நிம்மதி பெறுவதற்காகவும் தவிர அதை அல்லாஹ் ஆக்கவில்லை. அல்லாஹ்விடம் இருந்தே தவிர (உங்களுக்கு) உதவி இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.