Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௪௬

وَاِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِيْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا يَفْعَلُوْنَ   ( يونس: ٤٦ )

And whether We show you
وَإِمَّا نُرِيَنَّكَ
நிச்சயம் காண்பிப்போம்/உமக்கு
some (of) that which
بَعْضَ ٱلَّذِى
சிலவற்றை/எதை
We promised them
نَعِدُهُمْ
வாக்களிக்கிறோம் அவர்களுக்கு
or
أَوْ
அல்லது
We cause you to die
نَتَوَفَّيَنَّكَ
கைப்பற்றிக் கொள்வோம்/உம்மை
then to Us
فَإِلَيْنَا
நம் பக்கமே
(is) their return
مَرْجِعُهُمْ
மீளுமிடம்/அவர்களுடைய
then
ثُمَّ
பிறகு
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
(is) a Witness
شَهِيدٌ
சாட்சியாக இருப்பான்
over what they do
عَلَىٰ مَا يَفْعَلُونَ
அவர்கள் செய்தவற்றிற்கு

Wa imma nuriyannaka ba'dal lazee na'iduhum aw natawaffayannaka fa ilainaa marji'uhum summal laahu shaheedun 'alaa maa yaf'aloon (al-Yūnus 10:46)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உங்களுடைய வாழ்க்கை காலத்திலேயே) நீங்கள் பார்க்கும்படிச் செய்வோம்; அல்லது அவை வருவதற்கு முன்னர்) நாம் உங்களைக் கைப்பற்றிக் கொள்வோம். எவ்வாறாயினும் அவர்கள் நம்மிடம்தான் வர வேண்டியதிருக்கிறது. அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றான்.

English Sahih:

And whether We show you some of what We promise them, [O Muhammad], or We take you in death, to Us is their return; then, [either way], Allah is a witness concerning what they are doing. ([10] Yunus : 46)

1 Jan Trust Foundation

(உம் வாழ்நாளிலேயே) நாம் அவர்களுக்கு வாக்களித்த (வேதனைகளில்) ஒரு பகுதி (சம்பவிப்பதை) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்னமேயே) நாம் உம் ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டாலும் - (எப்படியிருப்பினும்) அவர்கள் நம்மிடமே திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள் செய்வதற்கெல்லாம் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.