(அவ்வாறு) அவர்கள் எறி(ந்து சூனியம் செய்)யவே, மூஸா (அவர்களை நோக்கி) "நீங்கள் செய்தவை அனைத்தும் (வெறும்) சூனியம்தான். அதிசீக்கிரத்தில் நிச்சயமாக அல்லாஹ் இவைகளை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (சூனியம் செய்து) விஷமம் செய்பவர்களின் செயலை சீர்படச் செய்வதில்லை.
English Sahih:
And when they had thrown, Moses said, "What you have brought is [only] magic. Indeed, Allah will expose its worthlessness. Indeed, Allah does not amend the work of corrupters. ([10] Yunus : 81)
1 Jan Trust Foundation
அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா| “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர்கள் எறிந்தபோது, (அவர்களை நோக்கி) “நீங்கள் செய்தவை (அனைத்தும் வெறும்) சூனியம்தான். நிச்சயமாக அல்லாஹ் அவற்றை அழிப்பான். நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளின் செயலை சீர்படுத்தமாட்டான்” என்று மூஸா கூறினார்.