Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௮௭

وَاَوْحَيْنَآ اِلٰى مُوْسٰى وَاَخِيْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوْتًا وَّاجْعَلُوْا بُيُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِيْمُوا الصَّلٰوةَۗ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ   ( يونس: ٨٧ )

And We inspired
وَأَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
to Musa
إِلَىٰ مُوسَىٰ
மூஸாவுக்கு
and his brother
وَأَخِيهِ
இன்னும் அவரது சகோதரரை
that "Settle
أَن تَبَوَّءَا
நீங்கள் இருவரும் @ஷஹிளூமீலிs
your people
لِقَوْمِكُمَا
உங்கள் சமுதாயத்திற்காக
in Egypt
بِمِصْرَ
மிஸ்ரில்
(in) houses
بُيُوتًا
வீடுகளை
and make
وَٱجْعَلُوا۟
இன்னும் ஆக்குங்கள்
your houses
بُيُوتَكُمْ
உங்கள் வீடுகளை
(as) places of worship
قِبْلَةً
தொழுமிடங்களாக
and establish
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
the prayer
ٱلصَّلَوٰةَۗ
தொழுகையை
And give glad tidings
وَبَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
(to) the believers"
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Wa awhainaaa ilaa Moosaa wa akheehi an tabaw wa aa liqawmikuma bi Misra bu yootanw waj'aloo bu yootakum qiblatanw wa aqeemus Salaah; wa bashshiril mu'mineen (al-Yūnus 10:87)

Abdul Hameed Baqavi:

(ஆகவே,) மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹீ அறிவித்தோம். "நீங்கள் இருவரும் உங்களுடைய மக்களுக்காக "மிஸ்ரில்" பல வீடுகளை அமைத்துக் கொண்டு, உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள். அன்றி, (நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள் என்றும்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்."

English Sahih:

And We inspired to Moses and his brother, "Settle your people in Egypt in houses and make your houses [facing the] qiblah and establish prayer and give good tidings to the believers." ([10] Yunus : 87)

1 Jan Trust Foundation

ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்| “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (கிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம்.