وَلَقَدْ بَوَّأْنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ ۚفَمَا اخْتَلَفُوْا حَتّٰى جَاۤءَهُمُ الْعِلْمُ ۗاِنَّ رَبَّكَ يَقْضِيْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ ( يونس: ٩٣ )
Wa laqad bawwaanaa Baneee Israaa'eela mubawwa-a sidqinw wa razaqnaahum minnat taiyibaati famakh talafoo hattaa jaaa'ahmul 'ilm; inna Rabbaka yaqdee bainahum Yawmal Qiyaamati feemaa kaanoo feehi yakhtalifoon (al-Yūnus 10:93)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வாக்களித்த) மிக வசதியான இடத்தைத் தந்து, நல்ல உணவுகளையும் அவர்களுக்கு அளித்து வந்தோம். அன்றி, உண்மையான ஞானம் (என்னும் இவ்வேதம்) அவர்களிடம் வரும் வரையில் இதற்கவர்கள் மாறுபடவில்லை; (வந்ததன் பின்னரே இதனை நிராகரித்து மாறு செய்கின்றனர்.) எதற்கு அவர்கள் மாறு செய்கின்றனரோ (அதனைப் பற்றி) அவர்களுக்கு மறுமை நாளில் நிச்சயமாக (அதுதான் உண்மை என்று) உங்களது இறைவன் தீர்ப்பளிப்பான்.
English Sahih:
And We had certainly settled the Children of Israel in an agreeable settlement and provided them with good things. And they did not differ until [after] knowledge had come to them. Indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ. ([10] Yunus : 93)
1 Jan Trust Foundation
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினரை, தகுந்த இருப்பிடத்தில் இருத்தி, நல்ல உணவுகளையும் கொடுத்து வந்தோம்; எனினும் உண்மையான ஞானம் அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் மாறுபாடு செய்யவில்லை; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எது பற்றி மாறுபாடு செய்து கொண்டிருந்தார்களோ அ(து விஷயத்)தில் இறுதி நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.