அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் "நிச்சயமாக என்னுடைய துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வாராது)" என்று கூறத் தலைப்படுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாகவும், பெருமையடிப்பவனாகவும் இருக்கிறான்.
English Sahih:
But if We give him a taste of favor after hardship has touched him, he will surely say, "Bad times have left me." Indeed, he is exultant and boastful – ([11] Hud : 10)
1 Jan Trust Foundation
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், “என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன” என்று நிச்சயமாகக் கூறுவான்; நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின்னர் அவனுக்கு இன்பத்தை நாம் சுவைக்க வைத்தால், “என்னை விட்டு தீமைகள் சென்றன”என்று நிச்சயமாக கூறுவான். நிச்சயமாக அவன் (செருக்குடன்) மகிழ்பவனாக தற்பெருமையாளனாக இருக்கின்றான்.