Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௮௭

قَالُوْا يٰشُعَيْبُ اَصَلٰوتُكَ تَأْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا يَعْبُدُ اٰبَاۤؤُنَآ اَوْ اَنْ نَّفْعَلَ فِيْٓ اَمْوَالِنَا مَا نَشٰۤؤُا ۗاِنَّكَ لَاَنْتَ الْحَلِيْمُ الرَّشِيْدُ  ( هود: ٨٧ )

They said
قَالُوا۟
கூறினார்கள்
"O Shuaib!
يَٰشُعَيْبُ
ஷுஐபே
Does your prayer
أَصَلَوٰتُكَ
உம் தொழுகையா?
command you
تَأْمُرُكَ
தூண்டுகிறது/உம்மை
that we leave
أَن نَّتْرُكَ
நாங்கள் விடுவதற்கு
what
مَا
எவற்றை
worship
يَعْبُدُ
வணங்கினார்கள்
our forefathers
ءَابَآؤُنَآ
மூதாதைகள்/எங்கள்
or
أَوْ
அல்லது
that we do
أَن نَّفْعَلَ
நாங்கள் செய்வதை
concerning our wealth
فِىٓ أَمْوَٰلِنَا
செல்வங்களில்/எங்கள்
what we will?
مَا نَشَٰٓؤُا۟ۖ
நாங்கள் நாடுகின்றபடி
Indeed you surely you
إِنَّكَ لَأَنتَ
நிச்சயமாக நீர்தான்
(are) the forbearing
ٱلْحَلِيمُ
மகா சகிப்பாளர்
the right-minded"
ٱلرَّشِيدُ
நல்லறிவாளர்

Qaaloo yaa Shu'aybu asalaatuka taamuruka an natruka maa ya'budu aabaaa'unaaa aw an naf'ala feee amwaalinaa maa nashaaa'oo innaka la antal haleemur rasheed (Hūd 11:87)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதைகள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டுவிடும்படியாக (நீங்கள் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உங்களுடைய தொழுகையா உங்களைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீங்கள் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்தாம்" என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.

English Sahih:

They said, "O Shuaib, does your prayer [i.e., religion] command you that we should leave what our fathers worship or not do with our wealth what we please? Indeed, you are the forbearing, the discerning!" ([11] Hud : 87)

1 Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.