(அதற்கு) அவர்களில் ஒருவர், "யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்துவிடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார்.
English Sahih:
Said a speaker among them, "Do not kill Joseph but throw him into the bottom of the well; some travelers will pick him up – if you would do [something]." ([12] Yusuf : 10)
1 Jan Trust Foundation
அவர்களில் ஒருவர்| “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களில் கூறுபவர் ஒருவர், “யூஸுஃபை கொல்லாதீர்கள். நீங்கள் (அவருக்கு கெடுதல்) செய்பவர்களாக இருந்தால் கிணற்றின் ஆழத்தில் அவரைப் போ(ட்டு வி)டுங்கள். வழிப்போக்கர்களில் சிலர் அவரை எடுத்துக் கொள்வார்கள்”என்று கூறினார்.