Skip to main content

ஸூரத்துர் ரஃது வசனம் ௧௧

لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ يَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْۗ وَاِذَآ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ ۚوَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ   ( الرعد: ١١ )

For him
لَهُۥ
அவனுக்கு
(are) successive (Angels)
مُعَقِّبَٰتٌ
பின் தொடரக் கூடியவர்கள்
from (before) (him)
مِّنۢ بَيْنِ يَدَيْهِ
அவனுக்கு முன்
and from and behind him
وَمِنْ خَلْفِهِۦ
இன்னும் அவனுக்குப் பின்
who guard him
يَحْفَظُونَهُۥ
பாதுகாக்கின்றனர்/அவனை
by
مِنْ
இருந்து
(the) command
أَمْرِ
கட்டளை
(of) Allah
ٱللَّهِۗ
அல்லாஹ்
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(does) not change
لَا يُغَيِّرُ
மாற்றமாட்டான்
(the condition) of a people
مَا بِقَوْمٍ
ஒரு சமுதாயத்திடம் உள்ளதை
until they change
حَتَّىٰ يُغَيِّرُوا۟
அவர்கள் மாற்றுகின்றவரை
what (is) in themselves
مَا بِأَنفُسِهِمْۗ
தங்களிடமுள்ளதை
And when wills
وَإِذَآ أَرَادَ
நாடினால்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
for a people
بِقَوْمٍ
ஒரு சமுதாயத்திற்கு
misfortune
سُوٓءًا
அழிவை
then (there is) no
فَلَا
அறவே முடியாது
turning away
مَرَدَّ
தடுப்பது
of it
لَهُۥۚ
அதை
and not for them
وَمَا لَهُم
அவர்களுக்கு இல்லை
from besides Him
مِّن دُونِهِۦ
அவனையன்றி
any protector
مِن وَالٍ
உதவியாளர் எவரும்

Lahoo mu'aqqibaatum mim baini yadaihi wa min khalfihee yahfazoonahoo min amril laah; innal laaha laa yughaiyiru maa biqawmin hattaa yughaiyiroo maa bianfusihim; wa izaaa araadal laahu biqawmin sooo'an falaa maradda lah; wa maa lahum min dooniheeminw waal (ar-Raʿd 13:11)

Abdul Hameed Baqavi:

(மனிதன் எந்நிலைமையிலிருந்த போதிலும்) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவனை பாதுகாக்கின்றார்கள். மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையை விட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. அல்லாஹ் யாதொரு வகுப்பாரையும் வேதனை செய்ய நாடினால், அதனைத் தடுப்பவர்கள் ஒருவரும் இல்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் அவனையன்றி வேறு யாரும் இல்லை.

English Sahih:

For him [i.e., each one] are successive [angels] before and behind him who protect him by the decree of Allah. Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves. And when Allah intends for a people ill, there is no repelling it. And there is not for them besides Him any patron. ([13] Ar-Ra'd : 11)

1 Jan Trust Foundation

மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.