jannaatu 'adiny yadkhu loonahaa wa man salaha min aabaaa'ihim wa man salaha min aabaaa'ihim wa azwaajihim wa zurriyyaatihim walmalaaa'i katu yadkhuloona 'alaihim min kulli baab (ar-Raʿd 13:23)
நிலையான சுவனபதிகளில் இவர்களும், நன்னடத்தையுடைய இவர்களுடைய தந்தைகளும், இவர்களுடைய மனைவிகளும், இவர்களின் சந்ததிகளும் நுழைந்து விடுவார்கள். ஒவ்வொரு வாசலிலிருந்தும் மலக்குகள் இவர்களிடம் வந்து,
English Sahih:
Gardens of perpetual residence; they will enter them with whoever were righteous among their forefathers, their spouses and their descendants. And the angels will enter upon them from every gate, [saying], ([13] Ar-Ra'd : 23)
1 Jan Trust Foundation
நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நல்ல முடிவு என்பது) “அத்ன்”சொர்க்கங்கள் ஆகும். அதில் இவர்களும், இவர்களுடைய மூதாதைகளில், இவர்களுடைய மனைவிகளில், இவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் நுழைவார்கள். ஒவ்வொரு வாசலில் இருந்தும் வானவர்கள் இவர்களிடம் நுழைவார்கள்.