(நம்பிக்கையாளர்களே! உங்களைத் துன்புறுத்திய எவரையும்) நீங்கள் பதிலுக்குப் பதிலாய்த் துன்புறுத்தக் கருதினால் உங்களை அவர்கள் துன்புறுத்திய அளவே அவர்களை நீங்கள் துன்புறுத்துங்கள். (அதற்கு அதிகமாக செய்யக்கூடாது. தவிர, உங்களைத் துன்புறுத்தியதை) நீங்கள் பொறுத்துச் சகித்துக்கொண்டாலோ அது சகித்துக் கொள்பவர்களுக்கு மிக்க நன்றே!
English Sahih:
And if you punish [an enemy, O believers], punish with an equivalent of that with which you were harmed. But if you are patient – it is better for those who are patient. ([16] An-Nahl : 126)
1 Jan Trust Foundation
(முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தண்டித்தால் நீங்கள் தண்டிக்கப்பட்டது போன்றே தண்டியுங்கள். நீங்கள் பொறுத்தால் அதுதான் பொறுமையாளர்களுக்கு மிக நல்லது!