அத்தூதர்களுக்கும் தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்.) அவ்வாறே இந்தக் குர்ஆனையும் (நபியே!) நாம் உங்களுக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உங்கள்மீது) இறக்கப்பட்ட இதை நீங்கள் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பியுங்கள். (இதன் மூலம்) அவர்கள் கவனித்தறிந்து கொள்வார்கள்.
English Sahih:
[We sent them] with clear proofs and written ordinances. And We revealed to you the message [i.e., the Quran] that you may make clear to the people what was sent down to them and that they might give thought. ([16] An-Nahl : 44)
1 Jan Trust Foundation
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அத்தாட்சிகளையும் வேதங்களையும் கொண்டு (அத்தூதர்களை அனுப்பினோம்). (இந்த) ஞானத்தை (நபியே!) உமக்கு இறக்கினோம்.ஏனெனில், அம்மக்களுக்காக இறக்கப்பட்ட (இந்த ஞானத்)தை (நீர்)அவர்களுக்கு தெளிவுபடுத்துவீர், இன்னும் (அந்த ஞானத்தையும் நபியின் கூற்றையும்) அவர்கள் சிந்திக்க வேண்டும்! (அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டும்!)